உஷா மேக்தா (25 மார்ச் 1920 – 11 ஆகஸ்ட் 2000[2]) அவர்கள் காந்தியவாதி மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் வானொலி ஊடாக இன்றும் நாட்டு மக்களுக்கு அறியப்படுகிறார், அந்த வானொலிக்கு இன்னொரு பெயர் மறைமுக காங்கிரஸ் வானொலி, பிரித்தானிய அரசின் அனுமதி இன்றி, மறைமுகமான இடத்தில் இருந்து இந்த வானொலி, நிலையம் ஒலிபரப்பாகியது. வெள்ளையனே வெளியேறு (1942), காலகட்டத்தில் இந்த வானொலி சிற்றலையில் ஒலிபரப்பியது. 1998ல், இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசன், எனும் நாட்டின் இரண்டாவது பெரிய விருதினை வழங்கி சிறப்பித்தது.

உஷா மேக்தா
உஷா மேக்தா 1996
பிறப்பு(1920-03-25)25 மார்ச்சு 1920
குஜராத், இந்தியா
இறப்பு11 ஆகத்து 2000(2000-08-11) (அகவை 80)
கல்விமுனைவர் பட்டம் காந்திய சிந்தனை
பணிசுதந்திர போராட்ட வீரர், பேராசிரியர்
பணியகம்வில்சன் கல்லூரி, மும்பபை(1980 வரை)[1]
காந்திய அமைதி அறக்கட்டளை
அறியப்படுவதுகாந்தியவாதி, சுதந்திர போராட்ட வானொலியின் முதல் அறிவிப்பாளர்
விருதுகள்பத்ம விபூஷன் (1998)

தொடக்க வாழ்க்கை

தொகு

உஷா சரஸ் எனும் கிராமத்தில் சூரத் குஜராத் இல் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அகமதாபாத் இல் தனது ஆசிரமத்தை பார்வையிடும்போது உஷா முதலில் காந்தி ஐச் சந்தித்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு, காந்தி அவரது கிராமத்திற்கு அருகில் ஒரு முகாம் ஏற்பாடு செய்தார், அதில் குழந்தை உஷாவும் பங்கேற்றார், பல அமர்வுகளிலும் கலந்து கொண்டார். மேலும் அங்கே பருத்தி நூற்பும் செய்தார்.

உஷாவின் ஆரம்ப பள்ளிப்படிப்பினை கெடா மற்றும் பருச்சிலும் பின்னர் பம்பாயின் சந்தரம்ஜி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் படிப்பில் சராசரி மாணவியாக இருந்தார். 1935 ஆம் ஆண்டில், இவரது மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் வகுப்பில் முதல் 25 மாணவர்களில் முதல் இடம் பிடித்தார். மும்பாயில் உள்ள வில்சன் கல்லூரி இயில் தனது கல்வியைத் தொடர்ந்தார், 1939 இல் தத்துவத்தில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார். இவர் அதன் பின் சட்டம் படிக்கத் தொடங்கினார், ஆனால் 1942 ஆம் ஆண்டில் தனது படிப்பை முடித்துவிட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்தார். அப்பொழுது அவருக்கு வயது, 22. அதன் பின் முழுநேர சுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கேற்றார்.

சுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கு

தொகு

ஆகஸ்ட் 14, 1942 இல், உஷாவும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் இரகசிய காங்கிரஸ் வானொலியைத் தொடங்கினர், இது ஒரு இரகசிய வானொலி நிலையம். இது ஆகஸ்ட் 27 அன்று தனது முதல் ஒலிபரப்பினை செய்தது.[1] அவரது குரலில் ஒலிபரப்பப்பட்ட முதல் சொற்கள்: "நீங்கள் கேட்டுக் கொண்டு இருப்ப காங்கிரஸ் வானொலியாகும் [இந்தியாவில் இருந்து சிற்றலை வரிசை 42.34 மீட்டரில் ஒலிபரப்புகிறது" இந்த வானொலியை ஒலிபரப்ப விதல்பாய் ஜாவேரி, சந்திரகாந்த் ஜாவேரி, பாபுபாய் தாக்கர் மற்றும் சிகாகோ வானொலியின் உரிமையாளர் நங்கா மோத்வானி ஆகியோர் உதவி செய்தனர்.

டாக்டர் ராம் மனோகர் லோஹியா, அச்சியூத்ராவ் பட்வர்தன் மற்றும் புருஷோத்தம் திரிகம்தாஸ் உள்ளிட்ட பல தலைவர்களும் இரகசிய காங்கிரஸ் வானொலிக்கு உதவினர். வானொலி ஒலிபரப்பு காந்தி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற முக்கிய தலைவர்களிடமிருந்து செய்திகளைப் பதிவு செய்து ஒலிபரப்பியது. பிரித்தானிய அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக, அதன் அமைப்பாளர்கள் கிட்டத்தட்ட தினமும் வானொலி நிலையத்தின் இடத்தினை மாற்றினர். ஆனால், 1942 நவம்பர் 12 ஆம் தேதி காவல்துறையினர் அவர்களைக் கண்டுபிடித்து உஷா மேத்தா உள்ளிட்ட அமைப்பாளர்களை கைது செய்தனர். அனைவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரகசிய காங்கிரஸ் வானொலி மூன்று மாதங்கள் மட்டுமே இயங்கினாலும், பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத செய்திகள் மற்றும் பிற தகவல்களை பரப்புவதன் மூலம் இது சுதந்திர போராட்ட இயக்கத்திற்கு பெரிதும் உதவியது. இரகசிய காங்கிரஸ் வானொலியும் சுதந்திர இயக்கத்தின் தலைவர்களை பொதுமக்களுடன் தொடர்பில் வைத்திருந்தது. அந்த நாட்களை நினைவூட்டிய உஷா மேத்தா, சீக்ரெட் காங்கிரஸ் வானொலியுடனான தனது ஈடுபாட்டை தனது "மிகச்சிறந்த தருணமும் அது தான்" என்றும், என்றும் விவரித்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்

தொகு

சிறைவாசத்திற்குப் பிறகு, உஷாவின் உடல்நிலை மோசமானது, இதனால் அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் பங்கேற்க் முடியவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று, உஷா மேத்தா மருத்துவ படுக்கையில் இருந்தார், இதனால் புதுதில்லியில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சுதந்திர விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. பின்னர் அவர் தனது கல்வியை மீண்டும் தொடங்கினார். காந்தியின் அரசியல் மற்றும் சமூக சிந்தனை குறித்து முனைவர் பட்ட ஆய்வினை செய்தார். மும்பை பல்கலைக்கழகத்துடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்: ஒரு மாணவராக, ஆராய்ச்சி உதவியாளராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, இறுதியாக குடிமை மற்றும் அரசியல் துறையின் தலைவராக உயர்ந்தார். இவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் இருந்து 1980 ல் ஓய்வு பெற்றார்.

இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்ம விபூஷன் 1998 இல் இவருக்கு வழங்கப்பட்டது.[2][3]பரணிடப்பட்டது 2017-10-19 at the வந்தவழி இயந்திரம் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதாக இது கருதப்படுகிறது.

கடைசி காலம்

தொகு

ஆகஸ்ட் 2000 இல், இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உஷா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் கிரந்தி மைதானத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 11, 2000 அன்று தனது 80 வயதில் இறந்தார், அவரது மூத்த சகோதரர் மற்றும் மூன்று மருமகன்களுடன் அவர் வாழ்ந்துவந்தார். அவரது மருமகன்களில் ஒருவரான, கேதன் மேத்தா, ஒரு பிரபலமான பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர். மற்ற மருமகன் டாக்டர் எடின் மேத்தா, ஒரு பிரபலமான மயக்க மருந்து நிபுணர், அவர் முன்பு எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் இயக்குநராக இருந்தார், இப்போது குர்கானில் மருத்துவத்துடன் தொடர்புடைய பணியில் இருந்து வருகிறார். மூன்றாவது மருமகன் டாக்டர் நிரத் மேத்தா ஆவார், அவர் ராணுவத்தில் பணிபுரிந்தார்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. NAVEEN JOSHI. FREEDOM FIGHTERS REMEMBER. Publications Division, Government of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788123025193.
  2. Noted Gandhian Usha Mehta Dead, M.K. Gandhi.org. Retrieved 15 August 2020.

மேலும் படிக்க

தொகு

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_மேக்தா&oldid=3924705" இலிருந்து மீள்விக்கப்பட்டது