ஊகப்புனைவு

ஊகப்புனைவு (Speculative fiction) என்பது புனைவிலக்கியத்தின் பல்வேறு பாணிகளை உள்ளடக்கிய ஒரு பெரும் பாணி. கனவுருப்புனைவு, அறிபுனை, திகில் புனைவு, மீயியற்கைப் புனைவு, அதிநாயகப் புனைவு, உலகழிவுப் புனைவு, மாற்று வரலாறு, பிறழ்ந்த உலகுப் புனைவு போன்ற பாணிகள் இதில் அடங்கும். பல நூற்றாண்டுகளாக இப்பாணிகளில் பல மொழிகளில் புனைவுப் படைப்புகள் படைக்கப்பட்டாலும் 1947 இல் தான் முதன்முதலில் இது ஒரு பாணியாக வரையறுக்கப்பட்டது. இதனை முதலில் ஒரு தனிப்பாணியாக அடையாளப்படுத்தியவர் ராபர்ட் ஏ. ஐன்லைன். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி முதல் இப்பாணியில் படைப்புகள் அதிக அளவில் எழுதப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊகப்புனைவு&oldid=1478361" இலிருந்து மீள்விக்கப்பட்டது