ஊசிப்புழு நோய்த் தொற்று
ஊசிப்புழு (Pinworm infection இது நூல்புழு நோய்த் தொற்று எனவும் அழைக்கப்படுகிறது) என்பது ஊசிப்புழுவினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஒட்டுண்ணி பீடிப்பு நோயாகும்.[3] மலவாயில் அரிப்புத் தோலழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும்.[1] இந்த நோய்த் தொற்று வந்தால் தூக்கமின்மை ஏற்படும்.[1] ஆனால் ஒரு சிலருக்கு இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை.[1]
ஊசிப்புழுத் தொற்று | |
---|---|
ஒத்தசொற்கள் | Enterobiasis, oxyuriasis[1] |
ஊசிப்புழுவின் முட்டைகள் (Enterobius vermicularis) | |
சிறப்பு | தொற்றுநோய் |
அறிகுறிகள் | மலங்கழிவாயில் அரிப்புணர்வு[1] |
வழமையான தொடக்கம் | 4 முதல் 8 கிழமைகள் வரையிலான தொடர்பு[2] |
காரணங்கள் | ஊசிப்புழு (Enterobius vermicularis)[3] |
சூழிடர் காரணிகள் | பள்ளிக்கூடம் செல்லுதல்[1] |
நோயறிதல் | புழுக்களையோ முட்டைகளையோ பார்த்தல்[1] |
தடுப்பு | கைகழுவுதல், ஒவ்வொரு நாளும் காலையில் குளித்தல், நாள்தோறு உள்ளாடை மாற்றல்[1] |
மருந்து | Mebendazole, pyrantel pamoate, or albendazole[4] |
முன்கணிப்பு | மிகவும் கடியதன்று [5] |
நிகழும் வீதம் | பரவலாகக் காணக்கூடியது [1][5] |
இந்த நோயானது ஊசிப்புழுவின் முட்டைகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது.[1] இந்த முட்டைகள் துவக்கத்தில் மலவாய் அருகே தோன்றி சுமார் மூன்று வாரங்கள் வரை அங்கு உயிர்வாழ்கின்றன. பள்ளிக்கூடம் செல்பவர்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பணிபுரிபவர்கள் அல்லது நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்கள் போன்றோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது.[1] ஆனால் மற்ற விலங்குகள் மூலமாக இந்த நோய்கள் பரவாது.[1] புழுவானது ஒரு செண்ட்டி மீட்டர் நீளத்திற்கு வந்த பிறகோ அல்லது நுண்நோக்கி மூலமாகவோ இதனைக் கண்டறியலாம்.[1][1]
பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்குப் பொருத்தவாறு மெபண்டசோல், பைடண்டல் பைமோட் அல்லது அல்பண்டசோல் ஆகிய மருந்துகளை இரண்டு பொழுதளவு இரண்டு வாரங்களுக்கு மருந்து கொடுக்கப்படலாம்.[4] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுபவர்களும் இதே அளவிலான மருந்துகளை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.[1] சொந்த உடைமைகளை வெந்நீரில் வைத்து துவைக்க வேண்டும்.[1] நன்றாக கைகழுவுதல், நாள்தோறும் காலையில் குளித்தல், உள்ளாடைகளை தினமும் மாற்றுதல் ஆகியவை இந்த நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.[1]
ஊசிப்புழு நோய்த்தொற்று உலகின் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது.[1][5] பொதுவாக இவ்வகையான நோய்த் தொற்று வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது.[1] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 20 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.[3] இது தீவிர நோய்த் தொற்றாகக் கருதப்படவில்லை.[5] இந்த நோய்த் தொற்று வரலாற்றின் பல காலங்களில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.[6]
வரலாறு
தொகுவெள்ளைப்பூண்டு இந்த நோய்த் தொற்றுக்கு மருந்தாக இந்தியா, சீனா, எகிப்து மற்றும் கிரேக்கம் (நாடு) போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.[7] இப்போக்கிரட்டீசு (459–370 கி.மு) நோயின் ஒட்டுண்ணிகளுக்கு மருந்தாக பூண்டினைக் குறிப்பிட்டுள்ளார்.[8] ஜெர்மனி தாவரவியலாளர் லானிசரஸ் (1564) நோய்த் தொற்றிற்கு பூண்டினை மருந்தாக குறிப்பிட்டுள்ளார்.[9] ஆனால் வெறும் வெள்ளைப் பூண்டினை தோலில் பயன்படுத்தினால் சருமப் பாதிப்புகள் ஏற்படும்.[10][11]
சான்றுகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 "Pinworm Infection FAQs". CDC. 10 சனவரி 2013. Archived from the original on 15 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016.
- ↑ "Epidemiology & Risk Factors". CDC. 10 January 2013. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
- ↑ 3.0 3.1 3.2 Stermer, E; Sukhotnic, I; Shaoul, R (May 2009). "Pruritus ani: an approach to an itching condition". Journal of Pediatric Gastroenterology and Nutrition 48 (5): 513–6. doi:10.1097/mpg.0b013e31818080c0. பப்மெட்:19412003.
- ↑ 4.0 4.1 "Treatment". CDC. 23 செப்டெம்பர் 2016. Archived from the original on 18 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Griffiths, Christopher; Barker, Jonathan; Bleiker, Tanya; Chalmers, Robert; Creamer, Daniel (2016). Rook's Textbook of Dermatology, 4 Volume Set (in ஆங்கிலம்) (9 ed.). John Wiley & Sons. p. 33.13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118441176. Archived from the original on 5 நவம்பர் 2017.
- ↑ Bynum, W. F.; Porter, Roy (2013). Companion Encyclopedia of the History of Medicine (in ஆங்கிலம்). Routledge. p. 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136110368. Archived from the original on 5 நவம்பர் 2017.
- ↑ "Extracts from the history and medical properties of garlic". Pharmacognosy Reviews 4 (7): 106–10. 2010. doi:10.4103/0973-7847.65321. பப்மெட்:22228949.
- ↑ Tucakov J. Beograd: Naucna knjiga; 1948. Farmakognozija; pp. 278–80.
- ↑ 3. Tucakov J. Beograd: Kultura; 1971. Lecenje biljem - fitoterapija; pp. 180–90.
- ↑ Borrelli, F; Capasso, R; Izzo, AA (November 2007). "Garlic (Allium sativum L.): adverse effects and drug interactions in humans". Molecular Nutrition & Food Research 51 (11): 1386–97. doi:10.1002/mnfr.200700072. பப்மெட்:17918162.
- ↑ Friedman, T; Shalom, A; Westreich, M (October 2006). "Self-inflicted garlic burns: our experience and literature review". International Journal of Dermatology 45 (10): 1161–3. doi:10.1111/j.1365-4632.2006.02860.x. பப்மெட்:17040429. https://archive.org/details/sim_international-journal-of-dermatology_2006-10_45_10/page/1161.
வெளியிணைப்புகள்
தொகுBrown MD (March 2006). "Images in clinical medicine. Enterobius vermicularis". The New England Journal of Medicine 354 (13): e12. doi:10.1056/NEJMicm040931. பப்மெட்:16571876.