ஊசிமடற் பனை
ஊசிமடற் பனை (Raphia ruffia) அல்லது இராப்பியா பாரினிபெரா Raphia farinifera என்பது வெப்பமண்டல ஆப்பிரிக்கப் பனைமர வகையாகும். இது ஈரமான தரைக்காடுகளிலும் சதுப்புநிலப் பகுதிகளிலும் மாந்த வாழ்விடப் பகுதிகளிலும் ஆற்றுநீர்ப் படுகைளிலும் வாழ்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 50 மீ முதல் 1000 மீ உயரம் வரை நிலவுகிறது.
ஊசிமடற் பனை | |
---|---|
Raphia farinifera | |
Raphia fariniferaபழங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | |
இருசொற் பெயரீடு | |
Raphia farinifera[1][2][3] (Joseph Gaertner | |
வேறு பெயர்கள் | |
பட்டியல்
|
வகைபாடு
தொகு- தாவரவியல் பெயர் : இராப்பியா உரூப்பியா Raphia ruffia
- குடும்பம் :பாமேசீயே Palmaceae
- வேறு பெயர் :ஊசிமடற் பனை Raffia Palm
இலை அமைவு
தொகுஇது மிகச்சிறிய மரம், ஆனால் மிகவும் பிரமாண்டமான இலையைக் கொண்டுள்ளது. இது இறகு வடிவ கூட்டிலைகளை கொண்டுள்ளது. இதனுடைய இலை 65 அழ (20மீ) நீளம் கொண்டுள்ளது. ஒவ்வொரு தனி இலையும் 2 முதல் 5 அடி நீளம் உள்ளது. இந்த இலைகள் 80 முதல் 100 வரை இருக்கும். இலைக்காம்பு 13 அடி நீளம் உள்ளது. இலையின் அடிப்பகுதியில் வெள்ளைப்பொடி போன்று இருக்கும். பூங்கொத்து 16 அடி நீளத்திற்கு இருக்கும்.
காணப்படும் பகுதி
தொகுஇம்மரம் ஆப்பிரிக்காவிலும் மடக்காசுக்கர் ஆகிய நாடுகளில் வளர்கிறது.
பொருளாதாரப் பயன்கள்
தொகுஇதனுடைய நாரிலிருந்து ஊரக மக்கள் துணி நெய்கிறார்கள். மேலும் இதன் இலைகளில் பாய்
, கூடை, தொப்பி ஆகியவை செய்கின்றனர்.
காட்சிமேடை
தொகுமேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகுபெரியதும் சிறியதும் ஆசிரியர் ஏற்காடு:இளங்கோ வெளியீடு:அறிவியல் வெளியீடு
வெளி இணைப்புகள்
தொகு