ஊசேடம் தீவு

ஊசேடம் (Usedom; இடாய்ச்சு மொழி: Usedom, போலியம்: Uznam, ஊசுனம்) என்பது பால்டிக் கடல் தீவு ஆகும். இது செருமனிக்கும் போலந்துக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. இது ரூகனுக்குப் பிறகு இரண்டாவது பெரிய பொமரேனியன் தீவும், பால்டிக் கடலில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவும் ஆகும்.

ஊசேடம்
Nickname: சூரியத் தீவு
StrandDüne.JPG
Baltic Sea map Usedom location.png
புவியியல்
அமைவிடம்பால்டிக் கடல்
பரப்பளவு445 km2 (172 sq mi)
நீளம்66.4 km (41.26 mi)
அகலம்23.9 km (14.85 mi)
கரையோரம்110 km (68 mi)
உயர்ந்த ஏற்றம்69 m (226 ft)
உயர்ந்த புள்ளிகோல்ம்
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை76,500
அடர்த்தி172 /km2 (445 /sq mi)

இதன் 80% நிலப்பரப்பு செருமனியில் உள்ளது. இதன் கிழக்குப் பகுதியும், தீவின் மிகப்பெரிய நகரமுமான சுவினோயித்சி போலந்தில் உள்ளது. தீவின் மொத்தப் பரல்லு 445 சதுர கிலோமீட்டர்கள் (172 சதுர மைல்கள்) (செருமானியப் பகுதி: 373 சதுர கிலோமீட்டர்கள் (144 சதுர மைல்கள்); போலந்துப் பகுதி: 72 சதுர கிலோமீட்டர்கள் (28 சதுர மைல்கள்). தீவின் மக்கள்தொகை 76,500 (செருமனியில் 31,500; போலந்தில் 45,000).

ஊசேடம் தீவு செருமனி, போலந்து பிராந்தியத்திலேயே சராசரி சூரிய ஒளி அதிகமாக உள்ள இடம் ஆகும். அத்துடன், பால்ட்டிக் கடலில் அதிக சூரிய ஒளி உள்ள இடமும் இதுவாகும்.[1] இதனால் இது "சூரியத் தீவு" எனவும் அழைக்கப்படுகிறது.[2]).

தாழ்வுப் பகுதியான இத்தீவில் விளையும் வேளாண்மைப் பொருள்களில் தானியமும், உருளைக் கிழங்கும் குறிப்பிடத் தக்கவையாகும். சுற்றுலாவிற்கும், மீன் பிடிக்கவும் இத்தீவு சிறப்புப் பெற்றுள்ளதால் மிகுதியான வருவாய் கிடைக்கிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "According to meteorological records of the last 30 years: Usedom is the sunniest region of Germany". 2014-11-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-03-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. S.A., Wirtualna Polska Media (15 July 2013). "Wczasy nad morzem - Świnoujście, Uznam, Wyspa Słońca". wp.pl. 23 March 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

  விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Usedom

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசேடம்_தீவு&oldid=3432745" இருந்து மீள்விக்கப்பட்டது