ஊத்தங்கரை

(ஊத்தங்கரை பேரூராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஊத்தங்கரை (Uthangarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஊத்தங்கரை ஒரு கல்வி நகரம் என அழைக்கப்படுகின்றது.[1]இங்கு உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பள்ளிகள் போட்டி போட்டு தேர்ச்சி சதவீதத்தையும் மாநில அளவிலான மதிப்பெண்களையும் பெற முந்துகின்றனர்.

ஊத்தங்கரை
ஊத்தங்கரை is located in தமிழ் நாடு
ஊத்தங்கரை
ஊத்தங்கரை
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°15′57″N 78°32′07″E / 12.2659119°N 78.5352087°E / 12.2659119; 78.5352087
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
ஏற்றம்
780 m (2,560 ft)
மொழிகள்
 • அதிகாரபூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635207
தொலைபேசி குறியீடு04341
வாகனப் பதிவுTN-24
பாலின விகிதம்944/1,000 /

பெயராய்வு

ஊத்தங்கரையில் கிடைத்திருக்கும் 13-14-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, ஆடையூர் நாட்டு எயில் நாட்டு தென்பற்று ஊர்கரை மேனோக்கிய மரமும் என்ற வரியில் இந்த ஊரின் பெயர் குறிக்கபட்டுள்ளது. இதன்படி இந்த ஊர் அக்காலத்தில் ஊர்கரை என்று அழைக்கப்பட்டது தெரியவருகிறது. காலப்போக்கில் இது ஊத்தங்கரை என்று மருவியுள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,470 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 9,421 பேர் ஆண்கள், 9,049 பேர் பெண்கள் ஆவார்கள். ஊத்தங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 85.11 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90.58%, பெண்களின் கல்வியறிவு 79.45% ஆகும். இது மாநிலச் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஊத்தங்கரை மக்கள் தொகையில் 8.96% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வார்டுஎண் 1

ஊத்தங்கரை வார்டு எண் 1 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்டையில் 7 வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1277 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[4]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 1277 -ல் ஆண்கள் 673 (53%) ,பெண்கள் 604 (47%) ஆவார்கள். 92 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 8 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 56 சதவீதமும், பெண்குழந்தைகள் 44 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 321 குடியிருப்புகள் உள்ளன.

வார்டுஎண் 2

ஊத்தங்கரை வார்டு எண் 2 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வார்டு மக்கள்தொகை அடிப்டையில் 6 வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1287 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[5]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 1287 -ல் ஆண்கள் 608 (47%), பெண்கள் 679 (53%) ஆவார்கள். 81% சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள்.19% சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 54 சதவீதமும் , பெண்குழந்தைகள் 46 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 323 குடியிருப்புகள் உள்ளன.

வார்டுஎண் 3

ஊத்தங்கரை வார்டு எண் 3 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வார்டு மக்கள்தொகை அடிப்படையில் கடைசியிடமான 15-வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 483 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[6]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 483 -ல் ஆண்கள் 237 (49%), பெண்கள் 246 (51%) ஆவார்கள். 99 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 1 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 38 சதவீதமும், பெண்குழந்தைகள் 62 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 127 குடியிருப்புகள் உள்ளன.

வார்டுஎண் 4

ஊத்தங்கரை வார்டு எண் 4 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வார்டு மக்கள்தொகை அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1473 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[7]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 1473 -ல் ஆண்கள் 749 (51%), பெண்கள் 724 (49%) ஆவார்கள். 93 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 7 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 57 சதவீதமும், பெண்குழந்தைகள் 43 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 381 குடியிருப்புகள் உள்ளன.

ஆதாரங்கள்

  1. http://www.thehindu.com/news/national/tamil-nadu/a-single-school-puts-uthangarai-in-spotlight/article8613387.ece
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 115. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. https://www.census2011.co.in/data/town/803959-uthangarai-tamil-nadu.html#google_vignette
  4. indikosh.com › India › Tamil Nadu › Krishnagiri › Uthangarai › Uthangarai
  5. indikosh.com › India › Tamil Nadu › Krishnagiri › Uthangarai › Uthangarai
  6. http://indikosh.com/subd/704473/uthangarai
  7. http://indikosh.com/subd/704473/uthangarai
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்தங்கரை&oldid=4060419" இலிருந்து மீள்விக்கப்பட்டது