ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
பாபஹரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] மூலவர் பாபஹரேசுவரர் ஆவார். கருவறையில் மூலவருக்கு அருகில், காசியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப் பெற்ற, உள்ளங்கை அளவுடைய பாணலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°18′45″N 79°55′33″E / 13.3126°N 79.9259°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவிடம்: | ஊத்துக்கோட்டை |
சட்டமன்றத் தொகுதி: | கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருவள்ளூர் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 92 m (302 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பாபஹரேசுவரர் |
தாயார்: | மரகதாம்பிகை |
வரலாறு | |
கட்டிய நாள்: | சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது |
அமைத்தவர்: | கட்டித்தேவன் யாதவராயன் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 92 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாபஹரேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°18′45″N 79°55′33″E / 13.3126°N 79.9259°E ஆகும்.
பாபஹரேசுவரர், மரகதாம்பிகை, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், பாலதண்டாயுதபாணி ஆறுமுகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ValaiTamil. "அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.
- ↑ "Papahareswarar Temple : Papahareswarar Papahareswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.