ஊரன் தாலுகா

ஊரன் தாலுகா (Uran taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 15 தாலுகாக்களில் ஒன்றாகும். [1]இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஊரன் நகராட்சி ஆகும்.

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாலுகா சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மக்கள் தொகையும், ஊரன் நகராட்சி மன்றம், 4 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும், 59 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஊரன் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,60,303 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 82,875 மற்றும் 77,428 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 18,784 - 12% ஆகும். சராசரி எழுத்தறிவு 85.69% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 7,165 மற்றும் 7,625 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.31%, இசுலாமியர்கள் 6.04%, பௌத்தர்கள் 2.16%, சமணர்கள் 0.33%, கிறித்துவர்கள் 0.76% மற்றும் பிறர் 0.41% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரன்_தாலுகா&oldid=3358171" இலிருந்து மீள்விக்கப்பட்டது