ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நெடுவாசல்
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (Panchayat union elementary school, Neduvasal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளி ஆகும். இங்கு 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னிறைவு பெற்ற தொடக்கப்பள்ளியாக திகழ்கிறது. தற்போது 4 புதிய கட்டிடங்கள், 3 ஆசிரியர்கள், 86 மாணவர்கள் என பள்ளி வளர்ச்சி அடைந்துள்ளது.[1]
பள்ளியின் செயல்பாடுகள்
தொகு- மொழி ஆய்வகத்தின் மூலம் மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொழி ஆய்வகம் உள்ள ஒரே அரசுத் தொடக்கப்பள்ளி இதுவே ஆகும்.
- கணினி மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது.
- சமுதாயத்துடன் இணைந்த பள்ளியாக செயலாற்றுகிறது.[2]
- 10 நட்சத்திர விருதுபெற்ற பள்ளியாகவும் இப்பள்ளி திகழ்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆச்சரியப் பள்ளி: கிராமத்தோடு சேர்ந்து வளரும் நெடுவாசல் அரசு தொடக்கப் பள்ளி". Hindu Tamil Thisai. 2017-10-09. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
- ↑ "நெடுவாசல் பள்ளி ஆண்டுவிழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2015/Mar/31/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-1091438.html. பார்த்த நாள்: 21 June 2024.