ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வடசிறுவளூர்
தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திண்டிவனம் வட்டத்தின் ஒலக்கூர் ஒன்றியத்தில் வடசிறுவளூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி 1954 தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன. படிப்படியாக ஆங்கிலவழி வகுப்புகளும் துவக்கப்பட்டு வருகின்றன.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வடசிறுவளூர் | |
---|---|
அமைவிடம் | |
வடசிறுவளூர், ஒலக்கூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | ஊராட்சி ஒன்றியப் பள்ளி |
தொடக்கம் | 1954 |
2015 அக்டோபர் நிலவரப்படி, இங்கு நாகவரம், வடசிறுவளூர், சுடரொளி நகர், மல்லிகாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயில்கின்றனர். பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியராக வ. பத்மாவதி உள்ளார். அவருடன் ரேவதி, இராஜேஷ், திருமலை, ஹீமாராணி பிரசன்னா, செல்லப்பன், கோபாலக்கிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- http://elections.tn.gov.in/PDF/ac79.htm பரணிடப்பட்டது 2016-04-08 at the வந்தவழி இயந்திரம், பாகம் எண்:110