ஊர்மிலேசு

இந்திமொழி எழுத்தாளர்

ஊர்மிலேசு (Urmilesh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். யாதவர் குடும்பத்தில் பிறந்த இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.[1]

2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆன்டு வரை மாநிலங்களவை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.[2] இந்துசுதான் மற்றும் நவபாரத் டைம்சு போன்ற பல்வேறு இந்தி மொழி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். மாநிலங்களவை தொலைக்காட்சியில் மீடியா மந்தன் என்ற நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார்.[3] வாரத்தின் செய்திகள் மற்றும் ஊடகங்களில் அதன் உள்ளடக்கம் பற்றிய ஊடகக் கண்காணிப்பு நிகழ்ச்சியாகும்.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி நியூசுகிளிக் என்ற ஊடக நிறுவனத்தின் ஆசியராக இருந்தார்.newsclick.in.[4]

ஊர்மிலேசு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் 1981 ஆம் ஆண்டில் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.[5]

கிறிசுடியானியா மேரி சான், காசுமீர் - விராசாத் அவுர் சியாசத் (2006),[6][7] சார்க்கண்ட் இயதுய் சமீன் கா அந்தேரா, பீகார் கா சாச்,[8] ராகுல் சாங்கிருத்யாயன் சிறீசன் அவுர் சங்கர்சு, சீலம் கினாரே தககதே சினர் போன்ற இந்தி புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. Basu, Anasuya (2014-04-20). "The image makers" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/the-image-makers/article5931081.ece. 
  2. Sen, Jahnavi. "Indian Journalists Respond to 'Sensationalist' Charge from Pakistan Media Authority - The Wire". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-10.
  3. Rajya Sabha TV (2013-02-24), Media Manthan - Media Trial ka Sach, பார்க்கப்பட்ட நாள் 2016-10-10
  4. "About us". NewsClick (in ஆங்கிலம்). 2016-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  5. "JNU still a red bastion, but SFI no more the leader - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/delhi/JNU-still-a-red-bastion-but-SFI-no-more-the-leader/articleshow/22641601.cms. 
  6. उर्मिलेश (2006-01-01) (in hi). कश्मीर: विरासत और सियासत. अनामिका पब्लिशर्स एंड डिस्ट्रीब्यूटर्स. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788179751459. https://books.google.com/books?id=WULK7-b6igQC. 
  7. "Chorus for Kashmir". The Telegraph. http://www.telegraphindia.com/1161009/jsp/nation/story_112741.jsp. 
  8. (in en) Annals of the National Association of Geographers, India. The Association. 2001-01-01. https://books.google.com/books?id=fMSAAAAAMAAJ&q=bihar+ka+sach+urmilesh&dq=bihar+ka+sach+urmilesh. 
  9. Urmilesh (2003-01-01) (in hi). Jhelam Kinare Dahakate Chinar. Anamika Publishers & Distributors (P) Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788179750674. https://books.google.com/books?id=Z7vjw718qAoC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிலேசு&oldid=3422429" இலிருந்து மீள்விக்கப்பட்டது