எஃப். ஏ. ஒபயசேகரா

சேர் பொரெஸ்டர் அகஸ்டசு ஒபயசேகரா (Forester Augustus Obeysekera) என்பவர் பிரித்தானிய இலங்கையின் அரசியல்வாதி. இவர் இலங்கை அரசாங்க சபையில் சபாநாயகராகவும், இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.[1][2]

சேர்
பொரெஸ்டர் அகஸ்டசு ஒபயசேகரா
Forester Augustus Obeysekera
இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகர்
பதவியில்
11 டிசம்பர் 1934 – 7 டிசம்பர் 1935
முன்னவர் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர்
பின்வந்தவர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கையர்
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு ரோயல் கல்லூரி

சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் சேர் சொலமன் கிறிஸ்டோபல் ஒபயசேகராவுக்குப்[3] பிறந்த இவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றார். ரோயல் கல்லூரி துடுப்பாட்ட அணித் தலைவராகவும் இருந்தவர்.[4]

சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக 1924 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பேரவை கலைக்கப்படும் வரையில் அதன் உறுப்பினராக இருந்தார். 1931 இல் அரசாங்க சபை அமைக்கப்பட்ட போது அதன் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார். 1934 ஆம் ஆண்டில் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய போது அவரது இடத்துக்கு ஒபயசேகரா நியமிக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஃப்._ஏ._ஒபயசேகரா&oldid=3545524" இருந்து மீள்விக்கப்பட்டது