எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்
எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் என்பது விவிலியத்தின் மத்தேயு நற்செய்தி 2:13-23 முடிய விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இதில் ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு திரும்பிச் சென்றபின், யோசேப்புவும் அவர் மனைவி மரியாவும் குழந்தையாயிருந்த இயேசு கிறித்துவேடு எகிப்து நாட்டிக்கு தப்பி ஓடிச் சென்றனர். ஏனெனில் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என எச்சரித்தார். ஏரோது இறக்கும்வரை அவர்கள் அங்கேயே இருந்தார். இவ்வாறு, எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது என மத்தேயு நற்செய்தியாளர் குறிக்கின்றார்.
இன்நிகழ்வுவைப்பற்றி பல செவிவழியாக பாரம்பரியக்கதைகளும் பல உள்ளன. குழந்தை இயேசு எகிப்துக்குள் நுழைந்த போது அங்கிருந்த வேற்று இன தெய்வ சிலைகள் உடைந்ததாகவும், குழந்தையாக நோயுற்றிருந்த இருந்த நல்ல கள்வனையும் அவரின் தாயையும் மரியா சந்தித்தது அடைக்களம் பெற்றதாகவும், குழந்தை இயேசு குளித்த நீநில் நல்ல கள்வனையும் குளிக்கச்செய்து அவரின் நோய் நீங்கியதாகவும் கதைகள் உள்ளன. மேலும் எகிப்துக்குப்போகும் வழியில் பலரை சந்தித்ததாகவும் கூறப்படுகின்றது. அவர்களுல் புனித அப்ரோடிசியுசு[1] குறிப்பிடத்தக்கவர் ஆவார். ஆயினும் இவற்றிக்கு எவ்வித விவிலிய ஆதாரமும் இல்லை.
இன்நிகழ்வே பொதுவாக இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் கலை முறையின் இறுதிக்காட்சி ஆகும். மேலும், மரியா மற்றும் குழந்தை இயேசுவின் வாழ்வின் சித்தரிப்பில் மிக முக்கியமான கருப்பொருளாகவும் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு