எக்காள மீன்
எக்காள மீன் புதைப்படிவ காலம்: Early Oligocene to Present[1] | |
---|---|
Bluespotted cornetfish, Fistularia commersonii | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Fistulariidae Blainville, 1818
|
பேரினம்: | Fistularia |
இனங்கள் | |
See text. |
எக்காள மீன் (Cornetfishes அல்லது flutemouths)[2] என்ற மீன்கள் Fistulariidae என்ற குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீண்டு குழாய் போலக் காணப்படுபவை. இவை ஒற்றைப் பேரினத்துடன், நான்கு சிற்றினங்களைம உள்ளடக்கியவை. வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலக் கடல்பகுதியில் உலகம் முழுவதும் இவைக் காணப்படுகின்றன.
இவை 200 செ.மீ. (6.6 அடி) நீளம் வரை வளரக்கூடியவை. மெல்லியதாகவும், விலாங்குகளைப் போல நீண்ட உடலமைப்பை உடையவை. ஆனால் மிக நீண்ட மூக்குப்பகுதியையும், தனித்துவமான முதுகுப்புற மற்றும் குதத்துடுப்புகளை உடையவை. வாலடியில் தனித்து தெரியும் சாட்டை போன்ற அமைப்பும், நீள்வட்ட கண்களும் எக்காள மீனினத்தின் தனித்துவமான அடையாளம்.[3]
இவை பொதுவாக கடலோரம் அல்லது பவளப் பாறை பகுதிகளில் சிறு மீன்கள், ஓட்டுமீன்கள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிர்களை உண்டு வாழ்கின்றன.[3]
எக்காள மீன்களைப் பிடிக்க மீனவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இவற்றை உள்ளூர் மீன் சந்தைகளில் காணலாம்.
சிற்றினங்கள்
தொகுதற்போது இந்த மீன் பேரினத்தில் கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள்:[4]
- பிசிடுலேரியா காமொர் சோனி ரூபெல், 1838 (blue-spotted cornetfish)
- பிசிடுலேரியா கார்னெட்டா கில்பெர்ட் & இசுடார்க்சு, 1904 (Pacific cornetfish)
- பிசிடுலேரியா பெட்டிம்பா லாசெபிடே, 1803 (red cornetfish)
- பிசிடுலேரியா தாபாகேரியா கரோலஸ் லின்னேயஸ், 1758 (cornetfish)
மேற்கோள்கள்
தொகு- ↑ Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25.
- ↑ Fishes of Australia, FISTULARIIDAE Flutemouths பரணிடப்பட்டது 2016-08-09 at the வந்தவழி இயந்திரம் (Museum Victoria)
- ↑ 3.0 3.1 Orr, J.W.; Pietsch, T.W. (1998). Paxton, J.R. (ed.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 170–171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Fistularia in FishBase. October 2012 version.
வெளி இணைப்புகள்
தொகு- Cornetfish video from Makena Landing, Maui Hawaii
- YouTube video of a group of cornetfish taken in Shark's Bay, Egypt.
- Genetic bottlenecks and successful biological invasions: the case of a recent Lessepsian migrant by Daniel Golani, Ernesto Azzurro, Maria Corsini-Foka, Manuela Falautano, Franco Andaloro, and Giacomo Bernardi