எக்சுனோரா இண்டர்நேசனல்

எக்சுனோரா இண்டர்நேசனல் (Exnora International) என்பது ஒரு அரசு சாரா சுற்றுச்சூழல் சேவை அமைப்பாகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரம் சென்னையில் 1989 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. எம்.பி.நிர்மல் என்ற சமூக ஆர்வலர் இவ்வமைப்பைத் தொடங்கினார். இயற்கையை காத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை தடுத்தல் ஆகிய செயல்பாடுகளில் எக்சுனோரா இண்டர்நேசனல் அமைப்பு முக்கியக் கவனம் செலுத்துகிறது.[1][2][3]

எக்சுனோரா இண்டர்நேசனல்
Exnora Innovators International
உருவாக்கம்30 செப்டம்பர் 1988; 36 ஆண்டுகள் முன்னர் (1988-09-30)
வகைஅரசு சாரா அமைப்பு
நோக்கம்சுற்றுச்சூழல் சிக்கல்கள்
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை பகுதி
இந்தியா
உறுப்பினர்கள்
தன்னார்வலர்
நிறுவனர்
எம். பி. நிர்மல்
வலைத்தளம்http://www.exnora.org
இளையோர் எக்சுனோரா இண்டர்நேசனல் குழுப் புகைப்படம்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அப்பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மூலமாகவே தீர்வு காணல் என்ற கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பு, புதுமை, தீவிரம் என்ற சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களின் முதல் இரண்டு எழுத்துகளையும் சேர்த்து எக்சுனோரா என்ற பெயர் உருவாக்கப்பட்டது [3]

வரலாறு

தொகு

எக்சுனோரா உருவாவதற்கு முன்பு, சென்னைக்கு அருகில் உள்ள பம்மல் நகரம் வசூல் அடிப்படையில் உள்ளூர் மாநகராட்சியின் சேவையின் கீழ் இருந்தது. எம்.பி. நிர்மல் என்பவரும் உள்ளூர்வாசிகள் குழுவினரும் தகுந்த கழிவு மேலாண்மை குறித்து அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்கள் வீடுகளில் இருந்து மாதாந்திர பயனர் கட்டணங்களை வசூலிக்கும் மாதிரியை அமைத்தனர். கழிவுகளை சேகரிக்கவும் அழிக்கவும் கழிவு எடுப்பவர்களை நியமித்தனர்.[4]

பம்மல் நகராட்சி ஆணையம் எக்சுனோராவை ஊக்குவித்தது. அவர்களின் கட்டண அடிப்படையிலான மாதிரியானது நகராட்சியின் திடக்கழிவு நிர்வாகத்திற்கு சேவை செய்யப்படாத பகுதிகளுக்கு உதவியது. எக்சுனோரா பசுமை பம்மல் என்ற சிறப்புப் பெயரை இவர்கள் பெற்றனர். பம்மலில் உருவாகும் கழிவுகளை ஒரு நாளைக்கு 16.5 டன் சேகரித்து நிர்வகிக்கும் அளவிற்கு எக்சுனோரா வளர்ந்தது. எக்சுனோராவும் நகராட்சி பணியாளர்களும் இணைந்து பம்மல் நகராட்சியின் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.[5]

யுனிசெப் அமைப்பும் எக்சுனோராவின் செயல்பாட்டு மேலாண்மை மாதிரியின் வெற்றிகளை சிறந்த நடைமுறை கையேடாக தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் வெளியிட்டது. மற்ற நகராட்சிளூம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் எக்சுனோராவின் செயல்பாடுகளை தங்கள் நகரங்களில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே அச்சிறு புத்தகத்தின் நோக்கமாக இருந்தது.[6] பெப்சிகோ என்ற அமெரிக்க நிறுவனமும் எக்சுனோராவைக் கவனித்தது. திடக்கழிவு மேலாண்மைக்கான அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனுடன் கூட்டு சேர்ந்தது. கழிவுப் பிரிவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து வீடுகளுக்குக் கற்பிப்பதன் மூலம் முயற்சி தொடங்கப்பட்டது. வாய்ப்புள்ளவற்றை மறு சுழற்சிக்கும், மண்புழு உரம் அமைக்கவும் இக்கூட்டிணைவு செயல்பட்டது. இவ்வமைப்பிற்கு 2006 ஆம் ஆண்டில் புதுமைக்கான தங்க மயில் விருதும், 2008 ஆம் ஆண்டில் யுனிசெப் மாதிரி திட்ட சான்றிதழையும் கிடைத்தன.[7]

எக்சுனோரா இன்டர்நேசனல் திருச்சியும் 321 என்ற எண்ணிடப்பட்ட இன்னர் வீல் மாவட்டமும் மலைப்பகுதியை பொதுப்பணித்துறையின் ஒப்புதலுடன் சுத்தம் செய்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 5 நிலவரப்படி எக்சுனோரா உறுப்பினர்கள் மாநிலத் திட்டக் குழுவுக்கு ஒரு குறிப்பாணையைப் பரிந்துரைத்துள்ளனர். பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பைச் செயல்படுத்துவதற்கும் அதன் தாக்கத்தைக் கண்காணிப்பதற்கும் ஒரு தனி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பாணை பரிந்துரைக்கிறது.

அமைவிடம்

தொகு

தற்போது கோயம்பேட்டில் தலைமையாமாகக் கொண்டு இயங்கி வருகிறது

நோக்கம்

தொகு

உலகளாவிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு உள்ளூரில் செயல்படுதல்.

இயக்கத்தின் பணி

தொகு

தெருக்களை தூய்மையாக்குதல் திட்டத்தின் பகுதியாக 17,000 தெரு அமைப்புகள் மூலம் சென்னை நகரின் 40% மற்றும் புறநகர்ப்பகுதிகளில் 75% மற்றும் தமிழ்நாட்டின் வேறு சில பகுதிகளில் தெருக்களின் துப்புரவு சேவைகளை இவ்வமைப்பு வழங்குகிறது. தெருக்கள் சுத்தம் செய்தல் என்ற செயல்பாட்டிற்குள் வீடுகளில் குப்பை சேகரிப்பு, வகைப் பிரித்தல், மக்கும் குப்பைகளை உரமாக்குதல், மறு சுழற்சி செய்தல் போன்ற பணிகளும் அடங்கும். கிடைக்கும் வருவாயில் தெருக்களை அழகுபடுத்துதல் பணி மேற்கொள்ளுதல் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இவை தவிர கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர் வழங்கல் பிரச்சினைகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு பழுது நீக்குதல் உட்பட்ட குடிமைச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளுடன் ஒத்துழைப்பை நாடி அவற்றை களையவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது [8].

சிறப்பு

தொகு

மாநகர காவல் ஆணையருடன் இணைந்து ஒரு லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட தொடங்கி வைத்தார்கள்மேலும் பசுமையே நாட்டின் வளமை என்பதை மூச்சாக வாழ்பவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Community Participation for Clean Surroundings - EXNORA India". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
  2. "Exnora award for Bhilai Steel Plant chief". தி இந்து. 22 January 2008. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Exnora-award-for-Bhilai-Steel-Plant-chief/article15148676.ece. பார்த்த நாள்: 14 January 2019. 
  3. 3.0 3.1 "ExNoRa International (EI)". The World Bank Group. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
  4. Malhotra, Meghna; Baradi, Manvita; Centre -UMC, Urban Management (in en). Compendium Of Good Practices in Solid Waste Management, March 2015. https://www.academia.edu/22906452/Compendium_Of_Good_Practices_in_Solid_Waste_Management_March_2015. 
  5. Malhotra, Meghna; Baradi, Manvita; Centre -UMC, Urban Management (in en). Compendium Of Good Practices in Solid Waste Management, March 2015. https://www.academia.edu/22906452/Compendium_Of_Good_Practices_in_Solid_Waste_Management_March_2015. 
  6. "Successful innovations in solid waste management systems: examples from five local bodies in Tamil Nadu - India Environment Portal | News, reports, documents, blogs, data, analysis on environment & development | India, South Asia". www.indiaenvironmentportal.org.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  7. "Pepsico-Corporate Social Responsibility | Replenishing Water | Waste Management Programme | PepsiCo India's". www.csrworld.net. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  8. Ghosh, Archana; Friedrich-Ebert-Stiftung (2003). Urban environment management : local government and community action. Institute of Social Sciences. Concept Publications. pp. 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-040-2. இணையக் கணினி நூலக மைய எண் 260087843.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சுனோரா_இண்டர்நேசனல்&oldid=3742009" இலிருந்து மீள்விக்கப்பட்டது