எக்ஸ் பாக்ஸ் ஒன்
எக்ஸ் பாக்ஸ் ஒன் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான எட்டாவது தலைமுறை எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரம். 2013ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட இது எக்ஸ் பாக்ஸ் 360இன் அடுத்த தலைமுறையும் எக்ஸ் பாக்ஸ் பெயரில் மூன்றாம் தலைமுறை முனையமும் ஆகும். 2013 ஆம் ஆண்டு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. சீனாவில் வெளியிடப்பட்ட முதல் எக்ஸ் பாக்ஸ் இதுவாகும். இது வெளிவந்த போது சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 மற்றும் நிண்டெண்டோ நிறுவனத்தின் வை-யூ ஆகிய முனையங்களுக்கு நேரடி போட்டியாக இருந்தது.
எக்ஸ் பாக்ஸ் ஒன் | |
---|---|
தயாரிப்பாளர் | மைக்ரோசாப்ட் |
வகை | நிகழ்பட விளையாட்டு முனையம் |
தலைமுறை | எட்டாவது தலைமுறை |
முதல் வெளியீடு | நவம்பர் 22, 2013 |
ஊடகம் | {{{media}}} |
இணையச் சேவை | எக்ஸ் பாக்ஸ் நேரடி |
முந்தைய வெளியீடு | எக்ஸ் பாக்ஸ் 360 |
முந்தைய தலைமுறை எக்ஸ் பாக்ஸ் 360 பயன்படுத்திய பவர்-பிசி தொழில் நுட்பத்தை விடுத்து இந்த முனையங்கள் எக்ஸ்86 எனப்படும் தொழில் நுட்பத்துக்கு மாறின. இந்த எக்ஸ்86 தொழில் நுட்பம் முதலாம் எக்ஸ் பாக்ஸ் முனையங்களில் முன்னர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேகக் கணிமையை முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் நேரடியாகப் பகிரும் வசதியும், மிக்சர் மற்றும் டிவிட்ச் போன்ற நேரலை விளையாட்டு வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பும் வசதியும் கொண்டிருந்தன. ஒரே இணைய இணைப்பில் உள்ள விண்டோஸ் 10 கணினி மூலமாகவும் ஆட்டங்களை ஆட முடியும். மேலும் புளூ-ரே தட்டுக்களையும், ஒருங்கிணைந்த தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி மூலம் நேரலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் வசதிகள் இருக்கின்றன.
வரலாறு
தொகுஇதன் முன்னோடியான ஏழாம் தலைமுறை எக்ஸ் பாக்ஸ் 360 மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.[1] அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு வன்பொருள் மேம்பாடுகள் மூலம் முனையத்தின் அளவு குறைக்கப்பட்டதோடு நம்பகத்தன்மை உயர்த்தப்பட்டது. [2] 2010 ஆம் ஆண்டு இந்த முனையத்துடன் இணைந்து செயல்படும் வகையில் கைனெக்ட் எனப் பெயரிடப்பட்ட இயக்க உணரி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிறிஸ் லூயிஸ், இந்த கைனெக்ட் கருவி, எக்ஸ் பாக்ஸ் 360 முனையத்தின் வாழ்நாளை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என்று கூறினார். [3]
அறிமுகம்
தொகு2013 ஆம் ஆண்டு மே 21 அன்று நடந்த ஊடக நிகழ்வில் எக்ஸ் பாக்ஸ் ஒன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற நிகழ்பட விளையாட்டு உலகின் மிகப்பெரிய நிகழ்வான ஈ3 விழாவில் முனையத்தின் முழுத் திறன்களுன் காட்சிப் படுத்தப்பட்டன. தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் வட அமெரிக்கா உட்பட 13 சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. ஜப்பான், சீனா உள்ளிட்ட மேலும் 26 சந்தைகளில் 10 மாதங்கள் கழித்து 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. [4]
புதுப்பிப்புகள்
தொகுவெளியிட்டு மூன்று ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டின் ஈ3 நிகழ்வில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ் பாக்ஸ் ஒன் எஸ் என்ற முனையத்தை அறிமுகப்படுத்தியது.[5] முந்தையதை விட குறைவான அளவும் எடையும் கொண்டிருந்தது. அதே நிகழ்வில் இதை விட சக்திவாய்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஒரு முனையத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாகக் கூறிய மைக்ரோசாப்ட் நிறுவனம், அதற்கு அடுத்த ஆண்டு எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் என்ற பெயரில் அதனை அறிமுகப்படுத்தியது. [6]
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வன்-தகடு இல்லாமல் முழுமையாக மேகக் கணிமையில் இயங்கும் முனையத்தையும் இதே பெயரில் வெளியிட்டது. இது வன்-தகடு உள்ள முனையத்தை விட 50 அமெரிக்க டாலர் விலை குறைவாகும்.[7]
வரவேற்பு
தொகுபெரும்பாலும் நல்ல வரவேற்புகளை பெற்று இருந்தாலும், எக்ஸ் பாக்ஸ் ஒன் முனையத்தில் சில முக்கிய குறைபாடுகளும் இருந்தன. முக்கியாமாக இந்த முனையத்திற்கு என்று தனிச்சிறப்பாக எந்த ஆட்டமும் முதலில் வெளியாக இல்லை என்பது பயனர்களின் பெரிய குற்றச்சாட்டாய் இருந்தது.
குறிப்புகள்
தொகு- ↑ "Waiting for the Xbox 360". Shacknews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
- ↑ Unboxing the Xbox 360 Super-Slim - IGN (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-10-10
- ↑ "Xbox News: MS: Xbox 360 'about halfway through' its lifecycle - ComputerAndVideoGames.com". web.archive.org. 2011-11-08. Archived from the original on 2011-11-08. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Microsoft Downscales Xbox One 2013 Launch to 13 Markets - IGN (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-10-10
- ↑ "TechRadar | The source for tech buying advice". TechRadar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
- ↑ Warren, Tom (2017-06-12). "Look for these Xbox One X logos to know you're getting enhanced 4K and HDR games". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
- ↑ Warren, Tom (2019-04-16). "Microsoft unveils disc-less Xbox One S All-Digital Edition for $249". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.