எசுதெல் அசுமோதெல்
எசுதெல் அசுமோதெல் (Estelle Asmodelle) (பிறப்பு: 22 ஏப்பிரல் 1964), முன்பு எசுதெல் மரியா குரூட் (Estelle Maria Croot) எனப்பட்டவர் ஓர் ஆத்திரேலிய விளம்பர நடிகையும் இடுப்பு நடன வல்லுனரும் இசைக்கலைஞரும் சமூகச் செயல்முனைவாலரும் புதுமைப்புனைவாளரும் நுண்ணியல் (அருவக்) கலைஞரும் கல்வியியலாளரும் ஆவார். இவர் முதல் ஆத்திரேலிய நியூ சவுத் வேல்சு பிறப்பு, இறப்புப் பதிவுத் துறையின் சட்டப்படியான பிறப்புச் சான்றிதழைப் பெயர்பாலினராகப் போராடிப் பெற்றவர் ஆவார்.[1] இவரது பாலின மாற்ரம் ஆத்திரேலியப் பெயர்பாலினருக்குச் சிறந்த பொதுமக்கள் ஏற்பைப் பெற வழிவகுத்தது.[2] இவர் 1986 இல் முதல் பாலின மாற்றச் சிறுமியாக அடையாளப்படுத்தி அறிவிக்கப்பட்டார்.[3] இவர் தான் ஆத்திரேலியாவிலேயே பேரளவில் ஒளிப்படம் பிடிக்கப்பட்ட பெயர்பாலினர் ஆவார்.[4]
எசுதெல் அசுமோதெல் | |
---|---|
பிறப்பு | 22 ஏப்ரல் 1964 போவ்ரல், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா |
மற்ற பெயர்கள் | எசுதெல் மரியா குரூட் |
வலைத்தளம் | |
www |
இளமை
தொகுஆத்திரேலியா, போவ்ராலில் பிறந்து பெரிமாவில் வளர்க்கப்பட்ட அசுமோதெல் பாரிக்கும் சில்வியா குரூட்டுக்கும் பிறந்த முதல் குழந்தை ஆவார். இவருக்குப் பிறந்தபோது வைக்கப்பட்ட பெயர் இதுவரை வெளியாகவில்லை. இவருக்கு பெளிந்தா என்றோரு தங்கை உண்டு. இவர் அப்போது ஆண்களுக்கான கல்லூரியாகவிருந்த சாவ்லியர் கல்லூரியில் பயின்றார். பின்னர் இவர் மோசுவேல் உயர்நிலைப்பள்ளியில் பயின்றுள்ளார். அங்கு இவர் பல பாடங்களில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் தனது 16 ஆம் அகவையில் முதுகுநாண் அழற்சி எனும் கடும்நோய்க்கு ஆட்பட்டுள்ளார்.இதனால் ஓராண்டு மருத்துவமனையிலேயே கழித்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு உருள்நாற்காலியைப் பயன்படுத்தியுள்ளார். பிறகு, முழுமையாகத் தேறியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Daily Mirror (Australia) Newspaper 13 October 1987
- ↑ Highlands Post Newspaper 10 January 1986
- ↑ Australian Playgirl Magazine for men, May 1986
- ↑ The Sunday Times May 1986