எசுப்பானிய உள்நாட்டுப் போர்

எசுப்பானிய உள்நாட்டுப் போர் என்பது, இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அரசுக்கு எதிராக அதன் படையினரில் ஒரு பகுதியினர் நடத்திய சதிப்புரட்சி முயற்சியின் விளைவாக எசுப்பெயினில் ஏற்பட்ட பெரிய உள்நாட்டுப் போரைக் குறிக்கும். இது 1936 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் தொடக்கம் 1939 ஏப்ரல் 1 ஆம் நாள் வரை எசுப்பெயின் நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது. இது புரட்சியாளர் வெற்றி பெற்றதுடன் முடிவுக்கு வந்தது. பாசிஸ்ட் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. இப் போரில் தோல்வியடைந்த அரசு தரப்பினருக்கு சோவியத் ஒன்றியமும், மெக்சிக்கோவும் ஆதரவு அளித்தன. புரட்சியாளர்களுக்கு இத்தாலி, ஜேர்மனி, போர்த்துக்கல் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இருந்தது. இது இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியிருந்தது. இது கம்யூனிச சோவியத் ஒன்றியத்துக்கும்; பாசிச இத்தாலி, நாசி ஜேர்மனி ஆகியவற்றுக்கும் இடையிலான மறைமுகப் போராகவே நடைபெற்றது. மக்கள் ஊடகங்களின் வருகையினால் இப்போர் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உலகின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம், உலக அரசியல் பிரிவினைகளும், இது தரப்பாரும் நடத்திய அட்டூழியங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

எசுப்பானிய உள்நாட்டுப் போர்
ராபர்ட் காப்பா, அரசுப் போராளியொருவரின் இறப்பு‎
"அரசுப் போராளியொருவரின் இறப்பு‎," பிரடெரிக் பாரெல் கார்சியாவின் புகழ் பெற்ற நிழற்படம் ராபர்ட் காப்பாவால் பிடிக்கப்பட்டது.)
நாள் 17 ஜூலை 19361 ஏப்ரல் 1939
இடம் கண்டம்சார் எசுப்பெயின், எசுப்பானிய மொரோக்கோ, எசுப்பானிய சகாரா, கனரித் தீவுகள், பலீரிக் தீவுகள், எசுப்பானிய கினியா, நடுநிலக் கடல்
தேசியவாதிகளின் வெற்றி; எசுப்பானியக் குடியரசு கலைப்பு; எசுப்பானிய அரசு அமைப்பு.
பிரிவினர்
எசுப்பானியா எசுப்பானியக் குடியரசு

சோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றியம்
பன்னாட்டுப் படை
மெக்சிக்கோ மெக்சிக்கோ

தேசியவாதிகள்

இத்தாலி இத்தாலி
செருமனி ஜேர்மனி
போர்த்துகல் போர்த்துக்கல்

தளபதிகள், தலைவர்கள்
மனுவேல் அசானா
ஜூலியன் பெஸ்ட்டெய்ரோ
பிரான்சிஸ்கோ லார்கோ கபாலேரோ
ஜுவான் நேகிரின்
இண்டலேசியோ பிரியேட்டோ
பிரான்சிஸ்கோ பிராங்கோ
கொன்சாலோ குவெய்ப்போ டி லானோ
எமிலியோ மோலா
ஜோஸ் சஞ்யூர்ஜோ
ஜுவான் ஜாக்
பலம்
450,000
350 வானூர்திகள்
200 படைப்பிரிவுகள்
(1938)[1]
600,000
600 வானூர்திகள்
290 படைப்பிரிவுகள்
(1938)[2]
இழப்புகள்
~500,000[3]

எல்லா உள்நாட்டுப் போர்களையும் போலவே இதிலும், குடும்ப உறுப்பினர்களும், அயலவர்களும், நண்பர்களும் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. போராளிகள் மட்டுமன்றிப் பொது மக்களும் அவர்களது அரசியல், சமய நோக்குகள் காரணமாக இரு தரப்பினராலும் கொல்லப்பட்டனர். 1939 இல் போர் முடிவுக்கு வந்த பின்னரும் குடியரசு ஆதரவாளர்கள் வெற்றிபெற்ற தேசிய வாதிகளால் அவ்வப்போது துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர்.

குறிப்புகள்

தொகு
  1. Thomas, p. 628
  2. Thomas, p. 619
  3. இழப்பு எண்ணிக்கை முரண்படுகின்றது. மதிப்பீடுகளின்படி 500,000 க்கும் 1 மில்லியனுக்கும் இடைப்பட்டோர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. காலப் போக்கில் வரலாற்றாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வந்தனர். தற்போதைய ஆய்வுகள் 500,000 போர் வரையே இறந்திருக்கலாம் என்கின்றன. ஹுயூ தாமஸ், The Spanish Civil War (2001), pp. xviii & 899–901, inclusive.