எசு. இராமச்சந்திரன்
இந்திய உயிரித் தொழில்நுட்பத் துறை நிறுவனர் மற்றும் செயலர்
எசு. இராமச்சந்திரன் (S. Ramachandran) இந்திய அரசின் கீழ் உயிரித் தொழில்நுட்பத் துறையை அமைப்பதற்குப் பொறுப்பான ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார்.[1] 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1986 ஆம் ஆண்டு இத்துறையின் முதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்திய அறிவியலுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2011 ஆம் ஆண்டு இராமச்சந்திரனுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[2] 2016 ஆம் ஆண்டு எசு. இராமச்சந்திரன் காலமானார். உயிரித் தொழில்நுட்பத் துறை அதன் நிறுவனருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் எசு. இராமச்சந்திரன் பெயரில் சொற்பொழிவுத் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "DBT's first secretary passes away". Department of Biotechnology, Government of India. Archived from the original on 22 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Bhushan for scientist". The Hindu. 27 January 2011. https://www.thehindu.com/sci-tech/science/Padma-Bhushan-for-scientist/article15534181.ece.
- ↑ "DBT salutes its former secretaries: teachers who steered the department". Department of Biotechnology, Government of India. Archived from the original on 22 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)