எசு. கலைவாணி

எசு. கலைவாணி (S. Kalaivani) ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனையாவார். 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 அன்று இவர் பிறந்தார்.

சீ. கலைவாணி
S. Kalaivani
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு25 நவம்பர் 1999 (1999-11-25) (அகவை 25)
தமிழ்நாடு
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை

48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சார்பாக பல்வேறு போட்டிகளில் போட்டியிட்டு விளையாடுகிறார். 2019 ஆம் ஆண்டு நேபாளத்தின் காட்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த ரஃபேலே பெர்காமாசுகோவிடம் கலைவாணி பயிற்சி பெற்று வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கலைவாணி 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி சென்னையின் வண்ணார்பேட்டையில் பிறந்தார்.[1] இவரின் தந்தை எம். சிறீனிவாசன் இளமைக் காலங்களில் குத்துச் சண்டை வீரராக இருந்தவராவார். கலைவாணியின் சகோதரரும் தேசிய அளவிலான குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சகோதரருக்கு தந்தை பயிற்சி அளிப்பதைப் பார்த்த கலைவாணிக்கு குத்துச் சண்டை மீது ஆர்வம் எழுந்தது. தந்தையும் இவருக்கு பயிற்சி வழங்க தொடங்கினார். இதன் விளைவாக துணை இளையோர் போட்டிகள் பலவற்றில் கலைவாணி கலந்து கொள்ள ஆரம்பித்தார். பல வெற்றிகளைப் பெற்றார்.[2]

சாதனைகள்

தொகு
  1. கலைவாணி 17 வயதில் தமிழ்நாட்டுக்காக மூத்தோர் தேசிய சாம்பியன்பட்டப் போட்டியில் பங்கேற்றார். பெல்லாரியில் சனவரி மாதம் நடைபெற்ற 3 ஆவது தேசிய பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். போட்டியின் முடிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3]
  2. 2019ஆம் ஆண்டு விஜய்நகரில் நடைபெற்ற மூத்தோர் அளவிலான தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் 18 வயது நிரம்பிய கலைவாணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். போட்டியின் மிகச் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனை என்ற பெயர் கலைவாணிக்குக் கிடைத்தது.
  3. 2019 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பாக்கித்தான், பூடான் நாட்டு வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நேபாளத்தின் மகார்சன் லலிதாவை 48 கிலோ எடைப் பிரிவில் வீழ்த்தி இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கத்தை வென்றார்.[4][5] [6]

சான்றுகள்

தொகு
  1. "Indian Boxing Federation Boxer Details". indiaboxing.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  2. "ஒலிம்பிக் கனவை சுமந்து குத்துச்சண்டையில் மின்னும் சென்னையை சேர்ந்த கலைவாணி". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  3. Vishal, R. "Tamil Nadu's Kalaivani is emerging as the surprise package in Indian women's boxing". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  4. "குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற திண்டுக்கல் மாணவி! தங்கச்செயின் வழங்கிய தாளாளர்!". nakkheeran (in ஆங்கிலம்). 2019-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  5. "குத்துச்சண்டையில் தங்கம் வென்ற வீராங்கனை கலைவாணி". Dinamalar. 2019-12-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  6. SPORTS, FISTO (2020-12-01). "S.Kalaivani: 'Boxing keeps my head straight'". www.fistosports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._கலைவாணி&oldid=3108896" இலிருந்து மீள்விக்கப்பட்டது