எசு/2012 (134340) 1 (S/2012 (134340) 1) வேறுபெயர்கள் எசு/2012 பி 1 (S/2012 P 1) அல்லது பி5 (P5) என்பது புளூட்டோ என்ற குறுங்கோளின் இயற்கைத் துணைக்கோள் (நிலவு) ஆகும். இது புதிதாகக் கண்டறியப்பட்டு 2012 சூலை 11 இல் அறிவிக்கப்பட்டது. இது புளூட்டோவின் ஐந்தாவது துணைக்கோள். இதன் நான்காவது துணைக்கோள் எசு/2011 பி1 கண்டறியப்பட்டு ஒரு ஆண்டின் பின் இது கண்டறியப்பட்டுள்ளது.

எசு/2012 (134340) 1
S/2012 (134340)
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் கண்டறியப்பட்ட படிமம்
எசு/2012 பி 1 (P5 ஆகக் காட்டப்பட்டுள்ளது).
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) சோவால்ட்டர் முதலானோர்
கண்டுபிடிப்பு நாள்
  • 26 சூன் 2012
  • (7 சூலை 2012 இல் உறுதிப்படுத்தப்பட்டது)
கண்டுபிடிப்பு முறை புகைப்படம்
சுற்றுப்பாதையின் சராசரி ஆரம் 42,000 km (26,000 mi) ± 2,000 km (1,200 mi)
மையத்தொலைத்தகவு ≈ 0
சுற்றுப்பாதை வேகம் 20.2 ± 0.1 நாட்கள்
சாய்வு ≈ 0
இது எதன் துணைக்கோள் புளூட்டோ
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 5–12.5 km (3–8 mi)[1]

கண்டுபிடிப்பு தொகு

இத்துணைக்கோள் கடந்த 2012 சூன் 26 முதல் சூலை 9 வரையான காலப்பகுதியில் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருந்த வைட்பீல்ட் புகைப்படக்கருவி 3 இன் மூலம் பிடிக்கப்பட்ட ஒன்பது தொகுதி படிமங்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.[2] இக்கண்டுபிடிப்பின் மூலம் அடையப்பட்டுள்ள புதிய தரவுகள் புளூட்டோ பற்றிய பல தகவல்களை தரும் என நம்பப்படுகின்றது.

பௌதீக இயல்புகள் தொகு

இத் துணைக்கோளின் விட்டம் 10-25 கிலோமீட்டர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[3][4] இப்பெறுமானங்கள் துணைக்கோளின் மேல் கீழ் எல்லைகளில் முறையே 0.35 மற்றும் 0.04 கணிப்புள்ள வெண் எகிர்சிதறல்களை அனுப்பிப் பெற்றுக்கொண்ட தோற்றளவுகளாகும்[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Ray Sanders (11 July 2012). "Hubble Space Telescope detects fifth moon of Pluto". Phys.org. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  2. Rob Preece (11 July 2012). "A cosmic discovery: Astronomers using NASA's Hubble Space Telescope find fifth moon orbiting Pluto". Daily Mail. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  3. "NewsCenter - Hubble Discovers a Fifth Moon Orbiting Pluto (07/11/2012) - The Full Story". HubbleSite. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  4. "BBC News - Hubble discovers new Pluto moon". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு/2012_பி_1&oldid=1369679" இலிருந்து மீள்விக்கப்பட்டது