எச்டிஎஃப்சி
எச்டிஎஃப்சி என்பது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும் (Deposit taking NBFC). வீடு வாங்க, கட்ட நிதி வழங்குவதே இந்நிறுவனத்தின் பிரதான தொழிலாகும். இதன் துணை நிறுவனங்களின் மூலம் வங்கி சேவை, பொது காப்பீடு, ஆயுள் காப்பீடு, பரஸ்பர நிதி, ரியல் எஸ்டேட், கல்வி கடன் என பல தொழில்களில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. [1]
வகை | பொது தேபச: HDFC முபச: 500010 |
---|---|
நிறுவுகை | 1977 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
தொழில்துறை | வீட்டுக்கடன் |
துணை நிறுவனங்கள்
தொகு- எச்டிஎஃப்சி வங்கி
- எச்டிஎஃப்சி எர்கோ பொதுக் காப்பீடு நிறுவனம்
- எச்டிஎஃப்சி லைஃப்
- எச்டிஎஃப்சி கிரெடிலா (கல்வி கடன் வழங்கும் நிறுவனம்)
- எச்டிபி நிதி சேவை நிறுவனம்