எச்டிஎஃப்சி வங்கி
எச்டிஎஃப்சிசி வங்கி வரையறுக்கப்பட்டது (HDFC Bank Limited), மும்பை, மகாராஷ்டிராவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஒரு இந்திய வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். ஏப்ரல் 2021 நிலவரப்படி, சந்தை மூலதனம் மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக எச்டிஎஃப்சி வங்கி உள்ளது. சந்தை முலதன அடிப்படையில் இந்திய பங்குச் சந்தையின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகும்.[8] அதோடு, சுமார் 120,000 பணியாளர்கள் அடிப்படையில் இந்தியாவின் 13வது பெரிய நிறுவனமாக உள்ளது[9]
வகை | பொது |
---|---|
நிறுவுகை | ஆகஸ்ட் 1994 |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | ஆதனு சக்கரவர்த்தி (தலைவர்) சசிதர் ஜெகதீசன் (முதன்மை நிர்வாக அதிகாரி) |
தொழில்துறை | நிதி சேவை |
உற்பத்திகள் | |
வருமானம் | ₹1,47,068.27 கோடி (US$18 பில்லியன்) [2] |
இயக்க வருமானம் | ₹1,14,032.21 கோடி (US$14 பில்லியன்) [2] |
நிகர வருமானம் | ₹27,253.95 கோடி (US$3.4 பில்லியன்) [2] |
மொத்தச் சொத்துகள் | ₹15,80,830.44 கோடி (US$200 பில்லியன்) [3] |
மொத்த பங்குத்தொகை | ₹1,75,810.38 கோடி (US$22 பில்லியன்) [3] |
உரிமையாளர்கள் | எச்டிஎப்சி(Housing Development Finance Corporation-25.7%) |
பணியாளர் | 116,971(31 மார்ச் 2020) |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | எச்டிஎப்சி செக்யூரிட்டீஸ், எச்டிஎஃப்சி பைனான்ஸியல் சர்வீசஸ் |
இணையத்தளம் | www |
[4][5][6] [7] |
வரலாறு
எச்.டி.எஃப்.சி வங்கி 1994 ஆம் ஆண்டில் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின்(
Housing Development Finance Corporation)துணை நிறுவனமாக மும்பை, மகாராட்டிரம், இந்தியாவில் பதிவு அலுவலகம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் அலுவலகம் மற்றும் முழு சேவைக கிளை சான்டோஸ் ஹவுஸ், வோர்லியில் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. ஜூன் 30, 2019 நிலவரப்படி 2764 மாநகரங்களில் 5500 கிளைகளை கொண்டுள்ளது. அதோடு, 430,000 விற்பனை முனையங்களை நிறுவி, 23,570,000 டெபிட் கார்டுகளையும் 12 மில்லியன் கிரெடிட் கார்டுகளையும் 2017ல் விநியோகித்துள்ளது.[10] 21 மார்ச் 2020 நிலவரப்படி 1,16,971 நிரந்தர பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.[11]
தயாரிப்புகள் மற்றும் சேவைகள்
எச்டிஎப்சி வங்கி மொத்த வியாபார வங்கி, தனிநபர் வங்கி, கருவூல பாதுகாப்பு, வாகனக் கடன், தனிநபர் கடன், சொத்து அடமான கடன், நுகர்வோர் சாதன கடன் மற்றும் கடன் அட்டைகள் போன்ற சேவைகளையும் மின்னணு பொருட்களான பேஷேப்(Payzapp) மற்றும் ஸ்மார்ட்பை(SmartBUY) ஆகியவற்றையும் வழங்கி வருகிறது.
இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்
எச்டிஎப்சி வங்கி பிப்ரவரி 2000ல் டைம்ஸ் வங்கியுடன் இணைந்தது. இதுவே தற்கால தனியார் துறை வங்கிகளின் முதல் இணைவு ஆகும்.[12] டைம்ஸ் வங்கி, பன்னாட்டு நிறுவனமான 'தி டைம்ஸ் குழுமத்தால்' நிறுவப்பட்டது, இது இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு ஊடக நிறுவனமாகும்.
எச்டிஎப்சி வங்கி, 2008ல் சென்சுரியன் பேங்க் ஆஃப் பஞ்சாப் (Centurian Bank of Punjab)ஐ கையகப்படுத்தியது. எச்டிஎப்சி வங்கியின் இயக்குநர் குழு ₹95.1 பில்லியனுக்கு சென்சுரியன் பேங்கை கையகப்படுத்த அனுமதியளித்தது. இது இந்தியாவில் நிதித் துறையில் நடந்த மிகப்பெரிய கையகப்படுத்துதல் ஆகும்.[13]
2021ல் ஃபெர்பைன் எனும் சில்லறை பரிவர்த்தன அமைப்பின் 9.99% பங்குகளை வாங்கியது, இது ஒரு டாடா குழுமம நிறுவனமாகும்.[14]
பட்டியலிடுதல் மற்றும் பங்குதாரர்கள்
எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தை(NYSE) மற்றும் லக்ஸம்பர்க் பங்குச் சந்தைகளில் ஜிடிஆர்(GDRs) என்று பட்டியலிடப்பட்டுள்ளது.[15]
பங்குதாரர்கள் (31 டிசம்பர் 2015 வரை) | அளவு[15] |
---|---|
தாய் நிறுவனம்(எச்டிஎஃப்சி) | 26.14% |
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) | 20.4% |
தனிப்பட்ட பங்குதாரர்கள் | 8.5% |
நிறுவனங்கள் | 7.5% |
காப்பீட்டு நிறுவனங்கள் | 5.38% |
யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா | 8.65% |
என்.ஆர்.ஐ / ஓ.சி.பி / மற்றவர்கள் | 0.29% |
நிதி நிறுவனங்கள் / வங்கிகள் | 2.75% |
ஏடிஎம்/ஜிடிஆர் | 18.78% |
சர்ச்சைகள்
வங்கியின் இணைய வங்கி, மொபைல் வங்கி மற்றும் கட்டண பயன்பாட்டு சேவைகளில் செயலிழப்பு சம்பவங்களை மேற்கோள் காட்டி வங்கியின் டிஜிட்டல் 2.0 திட்டத்தின் கீழ் புதிய கிரெடிட் கார்டுகள் மற்றும் அனைத்து திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி 2020 டிசம்பர் 2 அன்று எச்.டி.எஃப்.சி வங்கிக்கு உத்தரவிட்டது.[16][17]
ஜனவரி 29, 2020ல் பங்கு வெளியீட்டிற்கென தொடங்கப்பட்ட 39 கண்க்குகளில் ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை பின்பற்றப்டாத காரணத்தால் ₹1 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது.[18]
ஒடிசாவில் 59.41 லட்சம் டாலர் மோசடி குற்றச்சாட்டில் எச்.டி.எஃப்.சி வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.[19]
அலிக்டோ கேபிடல் மற்றும் துபாயின் மஷ்ரக் வங்கி ஆகியவை எச்டிஎஃப்சி வங்கி ஒழுங்குமுறை நெறிகளை பின்பற்றாத காரணத்தால், ஜுலை 2020ல் ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டனர்.[20]
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
2020
- இந்தியாவின் சிறந்த வங்கி : யூரோமனி விருதுகள் [21]
2019
- சிறந்த வங்கி: புதிய தனியார் துறை - FE சிறந்த வங்கி விருதுகள் [22]
- முன்னுரிமை துறை கடன் வழங்கலில் புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் வெற்றியாளர் - 11 வது உள்ளடக்கிய நிதி இந்தியா விருதுகள் (IFI) 2019 [23]
- 2019 ஆம் ஆண்டில் 1 வது இடத்தில் உள்ளது BrandZ Top 75 மிகவும் மதிப்புமிக்க இந்திய பிராண்டுகள் HDFC வங்கி தொடர்ந்து 6 வது ஆண்டாக இடம்பெற்றது.[24]
- மிகவும் மதிப்பிற்குரிய நிறுவன பட்டியலில், நிறுவன முதலீட்டாளர் ஆல்-ஆசியா (முன்னாள் ஜப்பான்) நிர்வாக குழு 2019 கணக்கெடுப்பு [25]
- இந்தியாவின் சிறந்த வங்கி, சிறந்த 2019 க்கான யூரோமனி விருதுகள் [26]
- ஆண்டின் சிறந்த வங்கி மற்றும் சிறந்த பெரிய வங்கி, வர்த்தகம் இன்று - பணம் இன்று நிதி விருதுகள் 2019 [27]
- குளோபல் பத்திரிகை பைனான்ஸ் ஏசியா எழுதிய இந்தியாவில் சிறந்த வங்கி 2019. [28]
- 2019 ஆம் ஆண்டில் 60 வது இடத்தில் உள்ளது BrandZ Top 100 மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டுகள் [29] HDFC வங்கி தொடர்ந்து 5 வது ஆண்டாக BrandZ Top 100 மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டுகள் 2019 இல் இடம்பெற்றது. வங்கியின் பிராண்ட் மதிப்பு 87 20.87 ஆக உயர்ந்துள்ளது 2018 இல் பில்லியன் முதல். 22.70 வரை 2019 இல் பில்லியன்.
- பிசினஸ் வேர்ல்ட் மேக்னா விருதுகளால் 2019 ஆம் ஆண்டில் சிறந்த பெரிய வங்கி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய வங்கி [30]
2016
- குளோபல் பிராண்ட்ஸ் இதழ் விருது மூலம் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த வங்கி செயல்திறன். [31]
- தனியார் துறை வங்கிகளிடையே நுண் நிதியத்தில் சிறந்த செயல்திறன் கிளை நபார்ட், 2016, நுண் நிதியத்தில் சிறந்த செயல்திறனுக்கான விருது [32]
- இந்தியாவின் சிறந்த வங்கிகள், ஆண்டின் சிறந்த வங்கி மற்றும் சிறந்த டிஜிட்டல் வங்கி முன்முயற்சி விருது 2016 பற்றிய கே.பி.எம்.ஜி [33]
- மூன்றாவது தொடர்ச்சியான ஆண்டிற்கான இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் பிராண்ட் இசட் தரவரிசை [34]
- ஆசியாவின் சிறந்த நிறுவனங்கள் 2015 இல் பைனான்ஸ் ஏசியா கருத்துக் கணிப்பு, சிறந்த நிர்வகிக்கப்பட்ட பொது நிறுவனம் - இந்தியா [35]
- ஜே.பி. மோர்கன் தர அங்கீகாரம் விருது, செயலாக்க விகிதங்கள் மூலம் நேராக வகுப்பில் சிறந்தது [36]
மேலும் படிக்க
- Bandyopadhyay, Tamal (2013). A Bank for the Buck. Jaico Publishing House. pp. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8184953961.
- Bandyopadhyay, Tamal (2019). HDFC Bank 2.0: From Dawn to Digital. Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789388423359.
மேலும் காண்க
- ஆதித்யா பூரி
- இந்தியாவில் வங்கி
- இந்தியாவில் உள்ள வங்கிகளின் பட்டியல்
- இந்திய ரிசர்வ் வங்கி
- இந்தியாவின் நிறுவனங்களின் பட்டியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- ↑ "Balance Sheet of HDFC Bank". moneycontrol.
- ↑ 2.0 2.1 2.2 "HDFC Bank Consolidated Profit & Loss account, HDFC Bank Financial Statement & Accounts". moneycontrol.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 August 2020.
- ↑ 3.0 3.1 "HDFC Bank Consolidated Balance Sheet, HDFC Bank Financial Statement & Accounts". moneycontrol.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 August 2020.
- ↑ "Stocks". Bloomberg L.P.
- ↑ "Sashidhar Jagdishan to be the new CEO of HDFC Bank". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
- ↑ "Sashidhar Jagdishan appointed MD & CEO of HDFC Bank; He will take charge on October 27". the hans india.
- ↑ "Composition of Board of Directors of HDFC Bank".
- ↑ "Largest bank by Market capitalization". MoneyControl. MoneyControl.
- ↑ [1]
- ↑ "HDFC Bank 2017" (PDF). பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
- ↑ "HDFC Bank". HDFC Bank. HDFC Bank.
- ↑ "HDFC Bank: Reports, Company History, Directors Report, Chairman's Speech, Auditors Report of HDFC Bank". profit.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
- ↑ "HDFC Bank to acquire Centurion Bank of Punjab". Banknet India. Archived from the original on 1 December 2019. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
- ↑ "Kotak Mahindra Bank, HDFC Bank To Acquire 9.99% Each In Ferbine". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
- ↑ moneycontrol.com https://www.moneycontrol.com/news/business/rbi-halts-hdfc-bank-digital-activities-asks-bank-to-stop-sourcing-new-credit-card-customers-after-multiple-digital-failures-6183521.html.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "Explained: Why RBI has asked HDFC Bank to stop digital launches, new credit card sourcing". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-12-08.
- ↑ "RBI imposes penalty on HDFC bank". rbi.org.in. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
- ↑ "A HDFC bank manager arrested for Rs 59.41 lakh fraud in Odisha". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ "Altico and Mashreq approach RBI against HDFC Bank". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 13 October 2019.
- ↑ Bank, HDFC. "Press Release".
- ↑ https://www.hdfcbank.com/content/api/contentstream-id/723fb80a-2dde-42a3-9793-7ae1be57c87f/7a11082e-9cf6-4c4f-9de3-7e9ff409ba76?
- ↑ https://www.hdfcbank.com/content/api/contentstream-id/723fb80a-2dde-42a3-9793-7ae1be57c87f/97fcd69c-ffa7-4bac-ab8f-d123ad88d8aa?
- ↑ Bureau, Our. "HDFC Bank retains ranking as India's valuable brand". @businessline.
- ↑ "HDFC Bank Awards - Consistently Awarded among India's Best Bank" (PDF).
- ↑ "HDFC Bank Awards - Consistently Awarded among India's Best Bank" (PDF).
- ↑ "Business Today – Money Today Financial Awards 2019" (PDF).
- ↑ "HDFC Bank bags the 'Best Bank in India' title by FinanceAsia magazine – expect this big measures in 2019 from the lender". Zee Business (in ஆங்கிலம்). 28 June 2019. பார்க்கப்பட்ட நாள் 28 June 2019.
- ↑ "Millward Brown – Top Global Brands 2019". hdfcbank.com. Archived from the original on 2019-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.
- ↑ "Business world Magna Awards" (PDF).
- ↑ "AWARD WINNERS 2016".
- ↑ "HDFC Bank wins microfinance award from NABARD in Goa". The Times of India (in அமெரிக்க ஆங்கிலம்). 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
- ↑ "Bank of the Year/ Digital Bank: HDFC BANK". Business Today. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
- ↑ "livemint". HDFC Bank is still India's most valuable brand: Brandz ranking. 22 September 2016.
- ↑ "Asia's best managed companies, part 3". FinanceAsia. 20 March 2015.
- ↑ "Top 10 Banks in India 2015". MBA Skool. Archived from the original on 2018-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.