எச். எம். ரெட்டி

இந்திய திரைப்பட இயக்குநர்

ஹனுமப்பா முனியப்ப ரெட்டி (Hanumappa Muniappa Reddy) (12 ஜூன் 1892 - 14 ஜனவரி 1960), எச்.எம்.ரெட்டி என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார். தெலுங்குத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்ற இவர், தெலுங்கிலும் தமிழிலிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட காளிதாஸ் என்ற முதல் இந்திய பன்மொழி ஒலித் திரைப்படத்தை இயக்கினார்.[1] [2] பின்னர் இவர் 1932ஆம் ஆண்டில் முதல் முழு நீள தெலுங்கு ஒலிப் படமான பக்த பிரகலாதாவை[3] தயாரித்து இயக்கினார்.

எச். எம். ரெட்டி
பிறப்புஹனுமப்பா முனியப்ப ரெட்டி
(1892-06-12)12 சூன் 1892
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு14 சனவரி 1960(1960-01-14) (அகவை 67)
பணிஇயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1892 ஜூன் 12 இல் பிறந்த இவர் பெங்களூரில் படித்தார். பிறகு சிலகாலம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்ய ஆர்வம் காட்டாததால் தனது பணியை விட்டு விலகினார். திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்ட இவர், மும்பைக்குச் சென்று தெலுங்குத் திரைப்படங்களில் பணி செய்ய ஆரம்பித்தார். அங்கு இவர் ஒரு படப்பிடிப்பு அரங்கத்தில் உதவியாளாராக பணியாற்றினார்.

பி. என். ரெட்டி என்பவருடனும் நடிகை ப. கண்ணாம்பா ஆகியோரை பங்குதாரராகக் கொண்டு சென்னையில் 'ரோகிணி பிக்சர்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்திலிருந்து வெளியான முதல் படம் "கிருஹ லட்சுமி", இது "ரங்கூன் ரவுடி" நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

எச். எம். ரெட்டி 14 ஜனவரி 1960 அன்று 'கஜ தொங்கா' தயாரிப்பின் போது இறந்தார்.

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. m.l. narasimham. "Time to introspect". 
  2. Velayutham, Selvaraj (2008). Tamil Cinema: The Cultural Politics of India's Other Film Industry. 270 Madison Ave, New York, NY 10016: Routledge. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-93037-3.{{cite book}}: CS1 maint: location (link)
  3. m.l. narasimham. "Wake up, industry". 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எம்._ரெட்டி&oldid=3708215" இலிருந்து மீள்விக்கப்பட்டது