எடி மாபோ
எடி கொய்க்கி மாபோ (Eddie Koiki Mabo, கி. 29 சூன் 1936 – 21 சனவரி 1992[1]) ஒரு டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சார்ந்த ஆஸ்திரேலியர். இவர் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமைகளை மீட்டுக்கொடுக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக அறியப்படுகிறார். மேலும் இவர் வரலாற்றுப்பூர்வமான உயர்நீதிமன்ற வழக்காகிய "மாபோ எதிர் குயின்ஸ்லாந்து" வழியாகவும் அறியப்படுகிறார்.
எடி மாபோ | |
---|---|
பிறப்பு | எடி கொய்கி சாம்போ 29 சூன் 1936 மறி, டொரெஸ் நீரிணைத் தீவுகள், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா |
இறப்பு | 21 சனவரி 1992 பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா. | (அகவை 55)
இப்புகழ் பெற்ற வழக்கின் தீர்ப்பை அடுத்து 1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் - எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டு, தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த (native title) ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது.
மாபோவின் இயற்பெயர் "எடி கொய்கி சாம்போ"[2]. அவரின் உறவின் பென்னி மாபோ தத்தெடுத்த பிறகு, தன் கடைசிப் பெயரை மாபோ என்று மாற்றிக்கொண்டார்.[3] இவர் டொரெஸ் நீரிணைத் தீவுகளில் ஒன்றான மறி தீவில் பிறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.abc.net.au/schoolstv/australians/emabo.htm
- ↑ Mabo: The Man - Adoption at Screen Australia Digital Learning
- ↑ "Facts Sheet - Edward Koiki Mabo 1936–1992". Racism No Way. Archived from the original on 2008-02-25. பார்க்கப்பட்ட நாள் 2008-03-12.
வெளியிணைப்புகள்
தொகு- Mabo papers
- Biography by Gail Mabo, his daughter பரணிடப்பட்டது 2012-03-27 at the வந்தவழி இயந்திரம்
- Eddie Mabo biography
- Collection of art works by Edward Koiki Mabo - held and digitised by the National Library of Australia
- Apek kebile: Eddie Koiki Mabo : the boy from the other side of the island (videorecording) - "about Eddie Mabo, his love for his people and his homeland ..." / Office for Torres Strait Islander Affairs
- Mabo: life of an island man / original screenplay by Trevor Graham (1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86819-580-4)
- Aboriginal and Torres Strait Islander Social Justice Commissioner பரணிடப்பட்டது 2009-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Social Justice Reports 1994-2009
- Native Title Reports 1994-2009
- Eddie Mabo's legacy continues