எட்கார் லுங்கு

எட்கார் சக்வா லுங்கு (Edgar Chagwa Lungu, 11 நவம்பர் 1956) சாம்பியாவின் அரசுத் தலைவராக சனவரி 25, 2015 அன்று பொறுப்பேற்ற சாம்பிய அரசியல்வாதி ஆவார். முன்னதாக மைக்கேல் சாட்டாவின் ஆட்சியில் லுங்கு நீதித்துறை அமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அக்டோபர் 2014 ஆம் ஆண்டில் சாட்டா காலமானதைத் தொடர்ந்து, சாட்டாவின் கட்சியான தேசப்பற்று முன்னணியின் தலைவராக ஏற்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக லுங்கு எதிர்கட்சித் தலைவர் அகைன்டெ இசிலெமாவை வென்று சனவரி 25, 2015 இல் அரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

எட்கார் லுங்கு
6வது, சாம்பியாவின் அரசுத் தலைவர்
பதவியில்
25 சனவரி 2015 – 24 ஆகத்து 2021
முன்னவர் கய் இசுக்காட் (பொறுப்பில்)
பின்வந்தவர் அகைந்தெ இச்சிலெமா
பெரும்பான்மை 27,757 (1.66%)
தனிநபர் தகவல்
பிறப்பு 11 நவம்பர் 1956 (1956-11-11) (அகவை 67)
நுடோலா, வடக்கு ரொடீசியா
தேசியம் சாம்பியர்
அரசியல் கட்சி தேசப்பற்று முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) எசுதர்
பிள்ளைகள் 6[1]
படித்த கல்வி நிறுவனங்கள் சாம்பியா பல்கலைக்கழகம் (எல்எல்.பி)
தொழில் வழக்கறிஞர்
சமயம் கிறித்தவம்
இணையம் www.edgar-lungu.com
பட்டப்பெயர்(கள்) பா எடிகார்[2]

அவர் 2021 ஜனாதிபதித் தேர்தலில் நீண்டகால எதிரியான ஹகைண்டே ஹிசிலேமாவிடம் தோற்றார்.

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்கார்_லுங்கு&oldid=3545609" இருந்து மீள்விக்கப்பட்டது