எட்டா ஜேம்சு

எட்டா சேம்சு ; பிறப்பு: சமசெட்டா ஆக்கின்சு; சனவரி 25, 1938 – சனவரி 20, 2012) ஓர் அமெரிக்க பாடகி ஆவார். புளூஸ், ஆர் & பி, ராக் & ரோல், ஜாஸ், ஆன்ம இசை, இறைவழிபாட்டுப் பாடல்கள் எனப் பல்வித வகைப்பாடல்களையும் பாடியுள்ளார். 1950களின் இடையில் தமது பாட்டுத்தொழிலை துவக்கினார். டான்ஸ் வித் மீ ஹென்றி, அட் லாஸ்ட், டெல் மாமா மற்றும் ஐ வுட் ராதர் கோ பிளைன்ட் போன்ற பாடல்கள் மூலம் புகழ்பெற்றார். அவரே பாடல்வரிகளை எழுதியதாகவும் கூறிவந்தார்.[1] போதை மருந்துப் பழக்கம் போன்ற பல தனிப்பட்ட சிக்கல்களில் துன்புற்று 1980களில் தனது இசைத் தொகுப்பு செவன் இயர்ஸ் இட்ச் மூலம் மீண்டு வந்தார்.[2]

எட்டா ஜேம்சு
Etta James.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜேம்செட்டா ஹாக்கின்சு
பிற பெயர்கள்மிஸ் பீச்சஸ்,
ஆர்&பியின் பெண்ணரசி
பிறப்புசனவரி 25, 1938(1938-01-25)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசனவரி 20, 2012(2012-01-20) (அகவை 73)
ரிவர்சைட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா.
இசை வடிவங்கள்புளூஸ், ஆர் & பி, ராக் & ரோல், ஜாஸ், ஆன்ம இசை, இறைவழிபாட்டுப் பாடல்கள்
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, கிட்டார்
இசைத்துறையில்1954–2012
வெளியீட்டு நிறுவனங்கள்மாடர்ன், செஸ்/எம்சிஏ, ஆர்கோ, கிரௌன், கேடட், ஐலண்ட்/பாலிகிராம், பிரைவேட் மியூசிக்/ஆர்சிஏ, எலெக்ட்ரா, விர்ஜின்/ஈஎம்ஐ, வெர்வ் போர்காஸ்ட்/யூனிவெர்சல் ரிகார்ட்ஸ்
இணைந்த செயற்பாடுகள்ஆர்வி புகுவா, ஜானி ஓடிசு, சுகர் பை டெசான்டோ

இவர் ராக் அண்டு ரோல் மற்றும் ரிதம் அண்ட் புளூஸ் வகைப்பாடல்களுக்கிடையே பாலமாக கருதப்படுகிறார். ஆறு கிராமி விருதுகளையும் 17 புளூஸ் மியூசிக் விருதுகளையும் வென்றுள்ளார். ராக் அண்ட் ரோல் பெருமைமிக்கவர் முற்றத்தில் 1993ஆம் ஆண்டிலும் புளூஸ் பெருமைமிக்கவர் முற்றத்தில் 2001இலும் கிராமி பெருமைமிக்கவர் முற்றத்தில் 1999 மற்றும் 2008இலும் இடம் பெற்றார். [3] ரோலிங் இசுடோன்சு இவரை எக்காலத்திலும் சிறந்த 100 பெரும் பாடகர்களின் தரவரிசையில் 22வதாகவும் 100 பெரும் கலைஞர்களில் 62ஆகவும் மதிப்பிட்டது.[4][5]

மேற்கோள்கள்தொகு

மேலும் அறியதொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டா_ஜேம்சு&oldid=3318494" இருந்து மீள்விக்கப்பட்டது