எட்வர்ட் என்றி பெட்ரிஸ் மைதானம்
எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் மைதானம் (Edward Henry Pedris Grounds also known as Edward Henry Pedris Stadium or Pedris Grounds) என்பது இலங்கையின் கொழும்பில் உள்ள ஒரு பல்நோக்கு மைதானமாகும். ஹெவ்லாக் பூங்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இது தற்போது கால்பந்து, ரக்பி யூனியன், கூடைப்பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தேசிய வீரரான கப்டன் டியூனுஜ் எட்வர்ட் ஹென்றி பெட்ரிசின் நினைவாக அவரது பெயரிடப்பட்ட இது இசிபத்தான வித்தியாலயத்துக்குச் சொந்தமானது.[1]
அமைவிடம் | கொழும்பு, இலங்கை |
---|---|
உரிமையாளர் | இசிபத்தான வித்தியாலயம் |
தரைப் பரப்பு | புல் (டெஸ்ஸோ), பந்தையப்பாதை (மோண்டோ) |
திறக்கப்பட்டது | சூலை 7, 1987 |
வரலாறு
தொகுஇந்தப் பூங்கா 1901 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையால் இலங்கையின் முன்னாள் இலங்கை பிரித்தானியத் தேசாதிபதியான சர் ஆர்தர் எலிபேங்க் ஹெவ்லாக் அவர்களை கௌரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த பூங்கா பல விளையாட்டுக் கழகங்களின் இருப்பிடமாக மாறியது. மேலும் பூங்காவின் வடக்கு பகுதியை கொழும்பு மாநகர சபை ஒரு பொது விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கமாக உருவாக்கியது. இது ஒரு பொது மைதானமாக இருந்ததால் பல ஆண்டுகளாக பல அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான இடமாக பயன்படுத்தப்பட்டது.
ஹெவ்லொக் டவுனில் சிலை திறப்பு விழாவின் போது, அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசா அவரது நினைவாக அருகில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார். 1987 ஆம் ஆண்டு யூலை 7 ஆம் தேதி "எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் மைதானம்" பிரதமர் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது.[2] இலங்கை உள்நாட்டுப் போரின் போது இது இலங்கை தரைப்படையால் தற்காலிக முகாமாகப் பயன்படுத்தப்பட்டது மேலும் போரைத் தொடர்ந்து பெரும் புனரமைப்புக்கு உள்ளானது.
2016 ஆம் ஆண்டு பாடசாலைக்கும் கொழும்பு மாநகர சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த்ததின் படி இசிபத்தான வித்தியாலயம்க்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்த மைதானம் வழங்கப்பட்டது..[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fernando, Lahiru. "Henry Pedris grounds handed over to Isipathana College".
- ↑ Dr. H. N. S. Karunatilake (7 July 2003). "The 88th death commemoration of the national hero Edward Henry Pedris". Daily News, Sri Lnka. Archived from the original on 14 July 2003. பார்க்கப்பட்ட நாள் 7 July 2016.
- ↑ "Henry Pedris Stadium to be handed over to Isipathana College - FT Online". www.ft.lk.