எட்வர்ட் நீளவால் பெரும் எலி

எட்வர்ட் நீளவால் பெரும் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கொறிணி
குடும்பம்:
பேரினம்:
லியோபோல்டாமிசு
இனம்:
லி. எட்வர்சி
இருசொற் பெயரீடு
லியோபோல்டாமிசு எட்வர்சி
தாமசு, 1882

எட்வர்ட் நீளவால் பெரும் எலி (Edwards's long-tailed giant rat)(லியோபோல்டாமிசு எட்வர்சி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பர்மா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2]

உணவு

தொகு

எட்வர்ட் நீண்ட வால் பெரும் எலி இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இரவு நேரங்களில் உணவு தேடும். இது முக்கியமாக நிலப்பரப்பில் உள்ள விதைகளைத் தேடுகிறது. இருப்பினும் உணவு தேவைக்காக மரங்களிலும் ஏறும்.[3]

வாழிடம்

தொகு

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஈரமான தாழ் நில பசுமைமாறா மற்றும் மலைக் காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரம் வரை காணப்படும்.

கூடுகள்

தொகு

எட்வர்ட் நீண்ட வால் பெரும் எலி, வலைகளுக்குள் இலைகளைக் கொண்டு கூடுகளை உருவாக்குகிறது. கூடுகள் பெரும்பாலும் தரையில் இருக்கும் அல்லது மரப் பொந்துகளில் அமைக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Aplin, K.; Lunde, D.; Molur, S. (2017). "Leopoldamys edwardsi". IUCN Red List of Threatened Species 2016: e.T11518A115103707. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T11518A22434258.en. https://www.iucnredlist.org/species/11518/115103707. பார்த்த நாள்: 12 March 2023. 
  2. "Leopoldamys edwardsi (Thomas, 1882)". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  3. Musser , GG . 1981. A new genus of arboreal rat from West Java , Indonesia . Zool Verh . 189 : 1-35 . 7673
  •