எட்வேர்ட் வைட்
எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White, II; நவம்பர் 14, 1930 – ஜனவரி 27, 1967) அமெரிக்க வான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார்.
எட்வேர்ட் ஹிகின்ஸ் வைட் Edward Higgins White, II | |
---|---|
நாசா விண்வெளி வீரர் | |
தேசியம் | அமெரிக்கர் |
தற்போதைய நிலை | பயிற்சியின் போது கொல்லப்பட்டார் |
பிறப்பு | நவம்பர் 14, 1930 டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | ஜனவரி 27, 1967 (age 36) புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
வேறு தொழில் | வானூர்தி ஓட்டுநர் |
படிநிலை | லெப்டினண்ட் கேர்ணல் |
விண்பயண நேரம் | 4நா 01ம 56நி |
தெரிவு | 1962 நாசா பிரிவு |
பயணங்கள் | ஜெமினி 4 |
பயண சின்னம் |
விண்வெளிப் பயணம்
தொகுஎட்வேர்ட் வைட் 1962 இல் நாசாவினால் இரண்டாவது கட்ட விண்வெளிப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். ஜெமினி திட்டத்தில் இணைந்து ஜெமினி 4 விண்கலத்தைத் தனியே செலுத்தி ஜூன் 3, 1965 இல் 21 நிபமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவர் பின்னர் ஜெமினி 7 விண்கலத்துக்கான பக்கபல (backup) விமானியாக இருந்தார். அப்பல்லோ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார்.
மறைவு
தொகுபுளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் அப்பல்லோ 1 விண்கலப் பயணத்துக்கான பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தனது சகாக்களான வேர்ஜில் கிறிசம், ரொஜர் சஃபி ஆகியோருடன் சேர்த்து கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- NASA biography
- Astronaut Memorial Foundation website பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்