எண்கண் பிரம்மபுரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

எண்கண் பிரம்மபுரீசுவரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் எண்கண் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

எண்கண் பிரம்மபுரீசுவரர் கோயில்
எண்கண் பிரம்மபுரீசுவரர் கோயில் ராஜகோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:எண்கண்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டமைப்பு

மூலவர்

தொகு

லிங்கத்திருமேனியாக உள்ள இக்கோயிலின் மூலவர் பிரம்மபுரீசுவரர் ஆவார். இறைவி பெரியநாயகி ஆவார். தல மரம் வன்னி மரம் ஆகும். இத்தலத்தின் தீர்த்தம் குமார தீர்த்தம் ஆகும்.[1]

பிரதான சன்னதி

தொகு

இக்கோயிலில் முருகன் பிரதான கடவுளாக இருக்கிறார். [2] தெற்கு வாயிலுக்கு எதிரே முருகப்பெருமான் சன்னதி உள்ளது.[3]

பிற சன்னதிகள்

தொகு

இக்கோயில் பிரம்மபுரீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. இதன் பழம்பெயர் பிரமீஸ்வரம் என்பதாகும். இக்கோயில் கிழக்கு நோக்கிய இராஜகோபுரமும், தெற்கு நோக்கிய மற்றொரு திருவாயிலும் கொண்டதாகும். முன்மண்டபத்தின் வடபுறத்தில் அம்பிகையின் சன்னதி உள்ளது. சிவாலயங்களுக்குரிய பரிவாரங்களுடன் ஒரே திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது. கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, உமையொருபாகன், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. தினமலர் கோயில்கள், அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
  2. "எண்கண் திருத்தலம் என்கிற பிரம்மபுரீஸ்வரர் கோயில்". Archived from the original on 2022-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.
  3. 3.0 3.1 குங்குமம், ஆன்மிகம், இங்கண் (எண்கண்) பிரமீஸ்வரம்

வெளி இணைப்புகள்

தொகு

புகைப்படத்தொகுப்பு

தொகு