எண்ணிம நாணய சந்தை
எண்ணிம நாணய சந்தை (CryptoCurrency Exchange) என்பது பங்குச் சந்தை போன்று எண்ணிம நாணயங்களை வாங்க, விற்க, பரிமாற்றம் செய்யும் சந்தை ஆகும். சில நேரங்களில் உள்ளூர் பணத்தைக் கொண்டும் பரிமாற்றம் செய்ய இயலும். இச்சந்தையில் வாங்குபவரும், விற்பனை செய்பவரும் சிறு வர்த்தகக் கட்டணம், சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பரவலாக்கப்பட்ட சந்தைகள்
தொகுபரவலாக்கப்பட்ட சந்தைக்கு உரிமையாளர்கள் என்று தனியாக இருப்பதில்லை. ஈத்தர்டெல்ட்டா, ஐடெக்சு, ஹடாக்சு, போன்றவை பயனர்களின் எண்ணிம நாணயங்களை சேமிப்பது இல்லை; இது சமவுரிமைப் பகிர்வு பிணைய இணைப்பில் பரிமாற்றங்களை செயல்படுத்துகிறது. பொதுவாக பாதுகாப்பு பிணக்குகள் இவ்வகையான பரவலாக்கப்பட்ட சந்தைகளை எதுவும் செய்ய இயலாது. 2018 பிற்பகுதியில் இவ்வைகயான சந்தைகள் மந்தநிலையில் உள்ளன.[1]
சில சந்தைகள்
தொகு- காயின்பேசு, காயின்பேசு ப்ரோ ஐக்கிய அமெரிக்கா
- பைனான்சு ஆங்காங்
- பிட்ரெக்சு ஐக்கிய அமெரிக்கா
- பிட்தம்ப் தென் கொரியா - சூன் 19, 2018 ஊடுருவலால் $32 மில்லியன் இழப்பு நேரிட்டது[2]
- பிட்பினக்சு ஆங்காங்
- க்ரிப்டோப்பியா நியூசிலாந்து
- வாசிரக்சு இந்தியா
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Russolillo, Steven; Jeong, Eun-Young (2018-07-16). "Cryptocurrency Exchanges Are Getting Hacked Because It’s Easy" (in en-US). Wall Street Journal. https://www.wsj.com/articles/why-cryptocurrency-exchange-hacks-keep-happening-1531656000.
- ↑ Park Si-soo (20 June 2018). "Korea's major crypto exchange Bithumb hacked; coins worth $32 million stolen". Korea Times. https://www.koreatimes.co.kr/www/tech/2018/06/133_250963.html. பார்த்த நாள்: 20 June 2018.