எண்ணூர் அனல் மின் நிலையம்

எண்ணூர் அனல்மின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு நிலக்கீல் கரி அனல் மின் நிலையம் ஆகும்.

எண்ணூர் அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
அமைவு13°12′5″N 80°18′42″E / 13.20139°N 80.31167°E / 13.20139; 80.31167
நிலைஇயக்கத்தில் உள்ளது
இயங்கத் துவங்கிய தேதிஉலை 1: மார்ச்சு 31, 1970
உலை 2: பெப்ரவரி 14, 1971
உலை 3: மே 17, 1972
உலை 4: மே 26, 1973
உலை 5: திசம்பர் 2, 1975

வரலாறு தொகு

எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ஆம் ஆண்டு மின்உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது.தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நான்கு அனல்மின் நிலையங்களுள் ஒன்றான இது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிலையத்தின் முழு திறன் 450 மெகாவாட்டு ஆகும்.[1] இந்த நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது.[2][3] எனினும், 1000 மெகாவாட்டு திறன் உலையின் கட்டுமான பணிகள் 2007இல் தொடங்கின.[4][5][6] இந்நிலையத்தில் தற்போது இரண்டு 60 மெகாவாட் உலையும் மூன்று 110 மெகாவாட் உலையும் அமைந்துள்ளன. கூடுதலாக 500 மெகாவாட் உற்பத்தி உலை நிறுவ பரிந்துரைக்கபட்டு கட்டுமான பணிகள் தொடங்கபட்டன.[7] இந்நிலையத்தின் மொத்த மதிப்பு 270 கோடி ரூபாய் ஆகும்.

அம்சங்கள் தொகு

மாநிலத்தின் முக்கிய உற்பத்தி நிலையமாக திகழும் இதன் உற்பத்தி திறன் அண்மைய ஆண்டுகளில் மேம்படுத்தபட்டுள்ளது.[8] தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளது.[1][9] மேலும், கழிவுகளை சுத்திகரித்து முறையாக வெளியேற்ற சிறப்பு அமைப்புக்களை கொண்டுள்ளது.[10]

இயக்கத்திற்கு தேவையான நிலக்கரி MCL (தல்கர் மற்றும் எல்பி பள்ளத்தாக்கு), ஒரிசா மற்றும் ECL, ரணிகஞ்சு , மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகிறது. 2008–2009 ஆண்டின் கொள்திறன் காரணி (plant load factor) 49.17 சதவிகிதம் ஆகும்.[11]

உற்பத்தி திறன் தொகு

பிரிவு எண் உற்பத்தி திறன் (மெகாவாட்டு) அமைக்கபட்ட
தேதி
தற்போதைய
நிலை
1 60 31 மார்ச்சு 1970 இயங்குகிறது
2 60 14 பிப்ரவரி 1971 இயங்குகிறது
3 110 17 மே 1972 இயங்குகிறது
4 110 26 மே 1973 இயங்குகிறது
5 110 2 டிசம்பர் 1975 இயங்குகிறது
6 660 2 டிசம்பர் 2015 இயங்குகிறது

மேம்பாடுகள் தொகு

எண்ணூர் மின் நிலையத்தில் மேம்படுத்தல் நடைபெறுகிறது. இங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.[12][13] இந்த புதிய திட்டம் அண்மைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்நிலையத்தின் உற்பத்தியை பெருக்க வடிவமைக்கபட்டது. இத்திட்டத்தில் நுட்ப நடைமுறைபடுத்தல் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[14] எனினும் அண்மைய வருடங்களில் தமிழ்நாட்டில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையால், இந்நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தபடுகிறது.[15]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Thermal, Power Station. "tangedco" (PDF). tangedco. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  2. Coal, Arrangement of. "arrangement of coal to meet the requirement of thermal power stations of tangedco" (PDF). tangedco. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
  3. "thermal power plants of india". thermalpowerplants. Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  4. "Ennore power plant construction to begin in March". தி இந்து. 2007-04-01 இம் மூலத்தில் இருந்து 2006-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061202205803/http://www.hindu.com/2006/11/11/stories/2006111114970900.htm. பார்த்த நாள்: 2012-05-07. 
  5. "location". wikimapia. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  6. "power stations". asia studies இம் மூலத்தில் இருந்து 2012-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120526135421/http://www.asiastudies.org/file/publication/balan/TNEB%20Paper.pdf. பார்த்த நாள்: 2012-05-07. 
  7. "Foundation stone for Ennore power plant to be laid on Sept 5". One India News. 2007-08-26. http://news.oneindia.in/2007/08/26/foundation-stone-for-ennore-power-plant-to-be-laid-on-sept-5-1188118953.html. பார்த்த நாள்: 2012-05-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "indian power sector". indian power sector. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  9. Ramakrishnan, T (2012-04-20). "Thermal stations perform well, yet energy deficit mounts". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/article3336776.ece. பார்த்த நாள்: 2012-05-07. 
  10. Vydhianathan, S (2012-11-01). "ETPS sets up plant to treat ash slurry". The Hindu இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125103121/http://www.hindu.com/thehindu/2002/01/11/stories/2002011101960500.htm. பார்த்த நாள்: 2012-09-07. 
  11. Jayabalan, P. "A Study on Power Scenario in Tamil Nadu" (PDF). Center for Asia Studies, Chennai. Archived from the original (pdf) on 26 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 6 Apr 2014. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  12. "TNEB’s Ennore SEZ power project gets green approval". financial express. 2010-09-10. http://www.financialexpress.com/news/tnebs-ennore-sez-power-project-gets-green-approval/679157/. பார்த்த நாள்: 2012-05-07. 
  13. Ramakrishnan, T (2012-02-01). "Nod for project to replace Ennore power station". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2766741.ece. பார்த்த நாள்: 2012-05-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  14. "TN to set up 660 MW supercritical thermal plant at Ennore". தி இந்து. http://www.thehindubusinessline.com/industry-and-economy/government-and-policy/article3257941.ece. பார்த்த நாள்: 2012-07-07. 
  15. Srikanth, R (2011-11-14). "State may have to rely on imported coal for new thermal projects". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2625049.ece. பார்த்த நாள்: 2012-09-07.