எதிர் பண்பாடு

எதிர் பண்பாடு (counterculture, counter-culture) என்பது முதன்மைச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து தகைமைகளிலும் நெறிகளிலும் பெரிதும் மாறுபடுகின்ற துணைப் பண்பாடு ஆகும். பெரும்பாலும் இது பெருவாக்கு பண்பாட்டுக் குடிவழக்குகளுக்கு எதிராக அமையும்.[1][2]

1979இல் நம்பாசாவில் அன்னை மையத்துக் கூட்டம்

எதிர் பண்பாட்டு இயக்கம் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஓர் குறிப்பிட்ட மக்களின் பண்பாண்மையையும் விருப்பங்களையும் வெளிப்படுத்துவதாக அமையும். பெருவாக்கு குடிவழக்கங்களுக்கு எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை எட்டும்போது பெரும் பண்பாட்டு மாறுதல்கள் நிகழ்கின்றன.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் புனைவியம் (1790–1840), பொகெமியனிசம் (1850–1910) போன்றவற்றை காட்டாகக் கூறலாம். அண்மைகாலத்தில் (1964–1974) காலகட்டத்தில் கிப்பி துணைப்பண்பாட்டை ஒட்டி நிகழ்ந்த எதிர்பண்பாட்டுப் போராட்டங்களும் குறிப்பிடத்தக்கன.[3] இந்தக் காலத்து எதிர் பண்ப்பாட்டு இயக்கத்தின் குவியம் போதைப்பொருள் பயன்பாடு, பாலுறவில் சுதந்திரம் (உகப்பான முறையில் பாலுறவு), பெண்கள் உரிமைகள் போன்றவற்றில் இருந்தது.

இந்தியாவில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த தலித்திய இயக்கமும் (தீண்டப்படாதவர்களை சமூகத்தின் அங்கமாக ஏற்றல்) தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையேற்ற திராவிட இயக்கமும் (கடவுள் கட்டமைப்பு, மூடநம்பிக்கைகள், ஆணாதிக்கம் எதிராக) எதிர் பண்பாடுகளாக அமைந்தன.

மேற்சான்றுகள்

தொகு
  1. "counterculture," Merriam-Webster's Online Dictionary, 2008, MWCCul.
  2. Eric Donald Hirsch. The Dictionary of Cultural Literacy. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-65597-8. (1993) p 419. "Members of a cultural protest that began in the U.S. in the 1960s and Europe before fading in the 1970s... fundamentally a cultural rather than a political protest."
  3. F.X. Shea, S.J., "Reason and the Religion of the Counter-Culture", Harvard Theological Review, Vol. 66/1 (1973), pp. 95-111, JSTOR-3B2-X.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_பண்பாடு&oldid=2746636" இலிருந்து மீள்விக்கப்பட்டது