எதுவார்து சீர்ம்
எதுவார்து கொன்ராட் சீர்ம் (Eduard Konrad Zirm, 18 மார்ச்சு 1863 - 15 மார்ச்சு 1944) உலகில் முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்த கண் மருத்துவராவார். ஜீர்ம், ஆஸ்திரியா நாட்டு வியன்னாவில் 1863ல் பிறந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம்[1] மற்றும் கண் மருத்துவம் பயின்றார்.[2] பட்டம் பெற்ற பிறகு 1892ல் ஓலமச் என்ற நகரில் ஒரு கண் மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்தார். ஓய்வு நேரங்களில் பிடில் வாசிப்பதும், தத்துவயியல் சார்ந்து படிப்பதும் இவரது பொழுது போக்குகளாகும். 1907ல் டை வெல்ட் அல்ஸ் ஃபுலென்(Die Welt als Fühlen) என்ற உணர்வுசார் நுண்ணறிவு பற்றிய முதல் நூல்வொன்றை எழுதியுள்ளார். 1944ம் ஆண்டு செக்கோசிலோவாக்கியா நாட்டில் இறந்தார்.
முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை
தொகு1905ம் ஆண்டு செக் நாட்டு ஒரு சிறு நகரில் கண் தெரியாத அலோஸ் க்ளோகர் என்பவரை சந்தித்தார் ஜீர்ம். அந்த நபருக்கு, சுண்ணாம்புநீர் கண்ணில் பட்டு இரண்டு விழியின் பார்வையும் பறிபோயிருந்தது. அதேசமயத்தில் காரல் பிரௌர் என்ற 11 வயது சிறுவனொருவன் உலோகப்பொருளால் பாதிக்கப்பட கண்களுடன் சிகிச்சைக்கு வந்தான். ஜீர்ம் முயன்றும் பிரௌரின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை, அதனால் பிரௌரின் கருவிழியை மட்டும் தோண்டியெடுத்து, வெற்றிகரமாக க்ளோகருக்குப் பொருத்தினார். பலவித கருவிகள் இருந்தும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யமுடியாத மருத்துவர்களுக்கிடையே அக்காலத்தில் எந்தவித நவீன கருவிகளுமின்றி மாற்று அறுவை சிகிச்சை செய்த பெருமை ஜீர்னையே சாரும்.[3] ஜீர்னின் கடைபிடித்த முறையே கருவிழி சிகிச்சைக்கு இன்றும் அடிப்படை செயல்முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Eye Bank Association of America."100th Anniversary." பரணிடப்பட்டது 2008-11-20 at the வந்தவழி இயந்திரம். Retrieved May 2, 2006.
- ↑ Dr. Zirm - Die erste geglückte Organtransplantation - 1905 at www.drzirm.org
- ↑ uids=16402960 Centennial review of corneal transplantation. (Clin Experiment Ophthalmol. 2005) - PubMed Result at www.ncbi.nlm.nih.gov