எத்திலிடீன் டை அசிட்டேட்டு

எத்திலிடின் ஈரசிட்டேட்டு (ethylidene diacetate, எத்திலிடின் டைஅசிட்டேட்டு) என்பது (CH3CO2)2CHCH3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்ற திடப்பொருளான இக்கரிமச் சேர்மம் ஒருகாலத்தில் வினைல் அசிட்டேட்டு தயாரிப்பதற்கான முன்னோடியாக இருந்தது.

எத்திலிடீன் டை அசிட்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
1,1-டை அசிட்டாக்சி ஈத்தேன், 1,1-ஈத்தேன் டையால் டை அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
542-10-9 Y
பண்புகள்
C6H10O4
வாய்ப்பாட்டு எடை 146.14
தோற்றம் நிரமற்ற திரவம் போன்றது
அடர்த்தி 1.07 g/cm3
உருகுநிலை 68 °C (154 °F; 341 K)
கொதிநிலை 167–169 °C (333–336 °F; 440–442 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

வினைவேக மாற்றியான பெரிக் குளோரைடு முன்னிலையில் அசிட்டால்டிகைடும் அசிட்டிக் நீரிலியும் வினை புரிவதால் எத்திலிடின் டைஅசிட்டேட்டு உருவாகிறது.[1] தொழில் முறையில் அதிகப்படியான தயாரிப்பு முறை இதுவேயாகும்

CH3CHO + (CH3CO)2O → (CH3CO2)2CHCH3

வெப்பச் சிதைவின் மூலமாக இதை அதனுடைய ஒருமம் ஆன வினைல் அசிட்டேட்டாக மாற்றிக் கொள்ள இயலும்.

(CH3CO2)2CHCH2 → CH3CO2CHCH2 + CH3CO2H

மேற்கோள்கள் தொகு

  1. G. Roscher "Vinyl Esters" in Ullmann's Encyclopedia of Chemical Technology, 2007 John Wiley & Sons: New York. எஆசு:10.1002/14356007.a27_419