எத்திலீன் கிளைக்கால் நச்சுமை

எத்திலீன் கிளைக்கால் அருந்தப்படுவதால் ஏற்படும் நஞ்சூட்டம் எத்திலீன் கிளைக்கால் நச்சுமை எனப்படுகின்றது. அருந்தியவுடன் ஏற்படும் அறிகுறி ஆல்ககோலை அருந்தியபின்னர் ஏற்படக்கூடிய உணர்வை ஒத்த நிலையாகும். நச்சுமை ஏற்படுதலால் வாந்தி, வயிற்று வலி ஆகிய ஆரம்ப அறிகுறிகள் தோன்றும். இதைத் தொடர்ந்து உணர்விழக்கும் நிலை, தலைவலி, வலிப்பு போன்றன ஏற்படக்கூடும். ஆரம்பநிலை நச்சுமை ஏற்பட்டு நீண்டகாலத்தின் பின்னர் சிறுநீரகக் கோளாறு அல்லது செயலிழப்பு மற்றும் மூளை, நுரையீரல் பாதிப்பு ஆகியன ஏற்படலாம்.[1] சிறியளவு அருந்தப்பட்டாலும் நச்சுமை ஏற்படக்கூடிய இடர்ப்பாடு எத்திலீன் கிளைக்காலால் ஏற்படும், இதனால் இறப்பும் ஏற்படலாம். மிகவும் குறைந்தளவு எத்திலீன் கிளைக்கால், ஏறக்குறைய 120 மில்லிலீட்டர் அளவு ஒரு சராசரி மாந்தனைக் கொல்லும் தன்மை உடையது.[2]

எத்திலீன் கிளைக்கால் நச்சுமை
எத்திலீன் கிளைக்கால் நச்சுத்தன்மை, எத்திலீன் கிளைக்கால் நஞ்சூட்டம்
எத்திலீன் கிளைக்கால்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10T51.8
ஈமெடிசின்emerg/177

எத்திலீன் கிளைக்கால் நிறமற்ற, மணமற்ற, இனிப்புச்சுவை உடைய நீர்மம் பொதுவாக தானுந்துகளின் எரியெண்ணெய், குளிரில் உறையாதிருக்கப் பயன்படும் உறையெதிர்ப்பிகளில் (antifreeze) ஒரு பிரதான கலவையாகச் சேர்ந்துள்ளது. இதன் இனிப்புத் தன்மை காரணமாக நாய், பூனை போன்ற வீட்டு வளர்ப்புப் பிராணிகள் இதனை அருந்தக்கூடும். [3]

உணரறிகுறிகள் தொகு

அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் எத்திலீன் கிளைக்கால் அருந்தப்பட்ட நேரத்தில் தங்கியுள்ளது.[4] முதன்முதலில் தோன்றும் உணர்குறி மதுசாரம் (எதனோல்) அருந்தியதன் பின்னர் ஏற்படும் போதையைப் போன்றதாகும். சில மணி நேரத்துள் மேலும் நஞ்சூட்டம் மிகையாகி குமட்டல், வாந்தி, வலிப்பு, மயக்கநிலை போன்ற வேறு அறிகுறிகள் தென்படலாம். [2] தெரியாத ஒரு நீர்மத்தை அருந்தியவருக்கு பாரதூரமான விளைவுகள் மற்றும் மதுபோதை ஏற்படின் எத்திலீன் கிளைக்கால் நச்சுமை என்று சந்தேகித்தல் வேண்டும். இதைக் குடித்தவர்களின் வாயில் இருந்து மதுவின் மணம் வருவதில்லை. எத்திலீன் கிளைக்கால் உள்ளெடுக்கப்பட்டு ஓரிரண்டு நாட்களுள் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படக்கூடும். மூளை, நுரையீரல், போன்ற வேறு உறுப்புகளும் பதிக்கபப்டுகின்றது. இவற்றின் விளைவாக ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் இறப்பு ஏற்படலாம்.

சிகிச்சை தொகு

இது ஒரு அவசர சிகிச்சை தேவைப்படும் நிலையாகும். எனவே பாதிக்கப்பட்டவர் உடனடியாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவேண்டியது மிக அவசியமானது. வைத்தியசாலையில் சேர்க்கமுன்னர் எந்த நீர்மத்தை அருந்தினார் என்பதை உறுதிப்படுத்த அதன் கொள்கலனைக் கண்டெடுத்தல், எத்திலீன் கிளைக்கால் நச்சுமையை அறுதியிட உதவி புரியும்.[3] அருந்தியவுடன் கொடுக்கப்படும் சிகிச்சையில் இரைப்பையில் இருந்து எக்கி மூலம் எத்திலீன் கிளைக்கால் உறிஞ்சப்படுதல் நச்சுத்தன்மையை ஓரளவு குறைக்கின்றது. வேறு சிகிச்சைகளாவன:

  • செயலூட்டப்பட்ட கரித்துண்டு
  • வளர்சிதை அமிலமையைக் கட்டுப்படுத்த நாளமூடு சோடியம் பைகார்பனேட்
  • நச்சு எதிர்ப்பி: போமிபிசொல் (fomepizole) மற்றும் எதனோல்[3]

மேற்கோள்கள் தொகு

  1. Kruse, JA (October 2012). "Methanol and ethylene glycol intoxication.". Critical care clinics 28 (4): 661–711. doi:10.1016/j.ccc.2012.07.002. பப்மெட்:22998995. https://archive.org/details/sim_critical-care-clinics_2012-10_28_4/page/661. 
  2. 2.0 2.1 "Ethylene glycol poisoning". பார்க்கப்பட்ட நாள் 3 மே 2017.
  3. 3.0 3.1 3.2 "Ethylene Glycol Toxicity". பார்க்கப்பட்ட நாள் 3 மே 2017.
  4. "College of Veterinary Medicine: Pet Health Topics: Antifreeze Poisoning" பரணிடப்பட்டது 2015-02-10 at the வந்தவழி இயந்திரம், Washington State University, accessed Sept. 11, 2014.