எத்திலெக்சைல் பால்மிடேட்டு

வேதிச் சேர்மம்

எத்திலெக்சைல் பால்மிடேட்டு (Ethylhexyl palmitate) என்பது C24H48O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டைல் பால்மிடேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். நிறைவுற்ற பக்கச் சங்கிலியுடன் கூடிய கொழுப்பு அமில எசுத்தரான இதை 2-எத்திலெக்சனால் மற்றும் பால்மிட்டிக் அமிலம் ஆகியனவற்றை வினைபுரியச் செய்து எத்திலெக்சைல் பால்மிடேட்டை வருவிக்கலாம். பொதுவாக அழகு சாதனப் பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது[1].

எத்திலெக்சைல் பால்மிடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்கேனாயிக் அமில 2-எத்த்லெக்சைல் எசுத்தர்
வேறு பெயர்கள்
ஆக்டைல் பால்மிடேட்டு
இனங்காட்டிகள்
29806-73-3 Y
ChemSpider 8649628 Y
InChI
  • InChI=1S/C24H48O2/c1-4-7-9-10-11-12-13-14-15-16-17-18-20-22-24(25)26-23(6-3)21-19-8-5-2/h23H,4-22H2,1-3H3 Y
    Key: GJQLBGWSDGMZKM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C24H48O2/c1-4-7-9-10-11-12-13-14-15-16-17-18-20-22-24(25)26-23(6-3)21-19-8-5-2/h23H,4-22H2,1-3H3
    Key: GJQLBGWSDGMZKM-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10474217
SMILES
  • O=C(OC(CCCCC)CC)CCCCCCCCCCCCCCC
UNII 2865993309 Y
பண்புகள்
C24H48O2
வாய்ப்பாட்டு எடை 368.65 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இயற்பியல் பண்புகள் தொகு

எத்திலெக்சைல் பால்மிடேட்டு அறை வெப்பநிலையில் ஒரு தெளிவான நிறமற்ற நீர்மம் ஆகும். இலேசான கொழுப்பு மணம் வீசும். 2-எத்திலெக்சனால் மற்றும் பால்மிட்டிக் அமிலம் ஆகியன அமில வினையூக்கியின் முன்னிலையில் வினைபுரிந்து எசுத்தரைக் கொடுக்கின்றன.

பயன்கள் தொகு

அழகியல் துறை பொருட்கள் உருவாக்கத்தில் ஒரு கரைபானாக, கடத்தும் முகவராக, நிறமியை ஈரப்படுத்தும் முகவராக, நறுமண நிலைநிறுத்தியாக, இளக்கியாக என பலவாறாகப் பயன்படுகிறது. சில சிலிக்கோன் வழிப்பெறுதிகள் போல தோலின் மீது இது செயற்படுகிறது.

மேற்கோள்கள் தொகு