எத்தில் நைட்ரைட்டு
எத்தில் நைட்ரைட்டு (Ethyl nitrite) என்பது அல்கைல் நைட்ரைட்டு வகை வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மமானது எத்தனாலில் இருந்து தயாரிக்கப்படலாம்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் நைட்ரைட்டு | |||
வேறு பெயர்கள்
1-நைட்ரசோஆக்சிஈத்தேன்
எத்தில் ஆல்ககால் நைட்ரைட்டு நைட்ரசு அமிலம் எதில் எசுத்தர் நைட்ரெதில் | |||
இனங்காட்டிகள் | |||
109-95-5 | |||
ChEMBL | ChEMBL1551365 | ||
ChemSpider | 7735 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 8026 | ||
| |||
பண்புகள் | |||
C2H5NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 75.07 g·mol−1 | ||
கொதிநிலை | 17 °C (63 °F; 290 K) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | [1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
டைமெதில்கிளைஆக்சைமை இறுதி விளைபொருளாகத் தரும் வினையில் இது பியூட்டனோன் உடன் வினையில் ஈடுபடும் வினைபொருளாகப் பயன்படுகிறது.
எத்தில் நைட்ரைட்டானது சளி மற்றும் காய்ச்சலுக்கான, எத்தனாலை அடிப்படையாகக் கொண்ட, மரபுசார் தென்னாப்பிரிக்க மருந்துப்பொருளின் முக்கிய உட்பொருளாக உள்ளது. இந்த மருந்தானது ஆப்பிரிக்கர்களின் மரபு வழி மருந்துப் பொருளாக இருப்பினும், டச்சு நாட்டிலிருந்து இதன் ஆதி தோன்றியிருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது. அமெரிக்காவில் வசித்து வரும் ஜெருமானிய டச்சு ஆமிசு வைக மக்களால் இதைப் போன்ற ஒரு மருந்துப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், 1980 களிலிருந்து, அமெரிக்காவில் இனிய நைட்ரைட்டு அலலது நைட்டரின் இனிய சாராயம் என அழைக்கப்படும் இம்மருந்தின் விற்பனை வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. [2] இம்மருந்தின் பயன்பாடு மெதெமோக்ளோபினீமியா என்ற இறப்பிற்கு காரணமாகக்கூடிய ஒரு அறிகுறியோடு தொடர்புடையதாக இருக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "NFPA 704 Ratings for Common Chemicals".
- ↑ "Rulemaking History for OTC Sweet Spirits of Nitre Drug Products". fda.gov. பார்க்கப்பட்ட நாள் 2016-12-26.
- ↑ "ETHYL NITRITE - National Library of Medicine HSDB Database". toxnet.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2017-11-18.