என்கே கான்
என்கே (மொங்கோலியம்: Энх ᠡᠩᠬᠡ; சீனம்: 恩克), (?–1394) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1391 - 1394இல் ஒரு குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தார். என்கேயை அடையாளப்படுத்துவது விவாதத்திற்குரிய ஒரு வரலாற்றுப் பொருளாக உள்ளது. பாரசீக வரலாற்று நூல்களின்படி, சோரிக்து என்பவர் ஏசுதர் ஆவார். என்கே கான் என்பவர் ஏசுதரின் மகனாவார். என்கே ஏசுதருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.[2][3] அதே நேரத்தில் மற்றவர்கள் சோரிக்து மற்றும் என்கே ஆகிய இருவருமே ஒரே நபர் என்று நம்புகின்றனர். இவரது பெயரான "என்கே" என்பதற்கு மொங்கோலிய மொழியில் "அமைதியான" என்று பொருள்.
என்கே 恩克 ᠡᠩᠬᠡ | |
---|---|
மங்கோலியர்களின் ககான் | |
வடக்கு யுவான் அரசமரபின் ககான் | |
ஆட்சிக்காலம் | 1391–1394[1] |
முடிசூட்டுதல் | 1388 |
முன்னையவர் | சோரிக்து கான் ஏசுதர் |
பின்னையவர் | எல்பெக் நிகுலேசுக்சி கான் |
இறப்பு | 1394 |
மரபு | போர்சிசின் |
அரசமரபு | வடக்கு யுவான் அரசமரபு |
மங்கோலிய வரலாற்றாளர் ச. போர் என்பவரின் கூற்றுப்படி, மிங் அரசமரபுக்கு எதிராகத் தைமூருடன் என்கே ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார். எனினும், 1405இல் மிங் அரசமரபை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது தைமூர் இறந்தார்.
உசாத்துணை
தொகு- ↑ Guush Luvsandanzan. தங்கச் சுருக்கம்.
- ↑ Shajrat Ul Atrak: Or The Genealogical Tree Of The Turks And Tatars P.218:“The fourteenth was named Eenkeh Khan, the son of Yusoordar.”
- ↑ Nizam ad-Din Shami. ظفرنامه (Book of Victory).