என்றி-அலெக்சாந்திரே தெசுலாந்திரேசு

என்றி-அலெக்சாந்திரே தெசுலாந்திரேசு (Henri Alexandre Deslandres) ForMemRS[1] (24 ஜூலை 1853 - 15 ஜனவரி 1948) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார், இவர் மியூடன் வான்காணகம், பாரிசு வான்காணகங்களின் இயக்குநராக இருந்தார். இவர் சூரிய வளிமண்டல நடத்தையில் செறிந்த ஆய்வுகள் மேற்கொண்டார்.

என்றி-அலெக்சாந்திரே தெசுலாந்திரேசு
என்றி-அலெக்சாந்திரே தெசுலாந்திரேசு
பிறப்புdf=y|1853|7|24
[பாரிசு
இறப்புdf=y|1948|1|15|1853|7|24
பாரிசு
தேசியம்பிரெஞ்சுக்காரர்
துறைவானியல்
பணியிடங்கள்மியூடன்
பாரிசு வான்கானகங்கள்
கல்வி கற்ற இடங்கள்ஏக்கோல் பல்தொழில்நுட்பம்
அறியப்படுவதுகதிர்நிரல்மானி
விருதுகள்ஜான்சன் பதக்கம் (1896)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1913)
என்றி டிரேப்பர் பதக்கம் (1913)
அரசு கழக உறுப்பினர்[1]

வாழ்க்கை

தொகு

இவரது இளமையில் எக்கோல் பல்தொழில்நுட்பப் பட்டப் படிப்பு, பிரெஞ்சு-பிரசியப் போர், பாரிசு கம்மியூன் பரட்சிச் சூழலால் நிரம்பியதாகும்.இவர் 1874 இல் பட்டம்பெற்ற தும், இவர் படைவீர வாழ்க்கையால் தன் சூழலுக்குத் துலங்கி எழுச்சிபெறும் செருமனிக்கு முகம்கொடுத்தார். இவர் பொறியாளர்களில் போர்த் தளபதி பதவி வரை உயர்ந்தார். அப்போது இயர்இயலில் பெருநாட்டம் கொண்டிருந்தார். இவர் 1881 இல் தன் படை வாழ்க்கையைத் துறந்து எக்கோல் பல்தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆல்பிரெடு கார்னியூவின் ஆய்வகத்தில் சேர்ந்து, அங்கு கதிர்நிரலியலில் பணிபுரிந்தார். இவர் சோர்பான் பல்கலைக்கழகத்திலும் தன் கதிர்நிரல் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார். அங்கே தன் முனைவர் பட்டத்தையும் 1888 இல் பெற்றார்.இவர் யோகான் பால்மரையொத்த கதிர்நிரல் கோடுகளில் அமைந்த எண்ணியல் அணிவகுப்பை கண்டறிந்து, 20 ஆம் நூற்றாண்டில் குவைய இயக்கவியல் தோன்றிவளர வழிவகுத்தார்.

1868 இன் பியேர் ஜான்சன் அவர்களின் சூரிய ஒள்மறைப்பு நோக்கீடுகள், இவரை அறிவியல் கல்விக்கழகத்துக்கு இனி வானியலை வடிவியலும் இயக்கவியலும் ஆட்சி செய்ய முடியாது; இயற்பியலும் வேதியியலும் அந்த பொறுப்பைப் பிடிதுக்கொள்ளும். என அறிவுரை கூற வைத்தன . இந்த அறிவுரை பாரிசு வான்கானகத்தின் இயக்குந்ரான உர்பைன் இலே வெரியரால் புரக்கணிக்கப் பட்டது. என்றாலும் பிரெஞ்சு அரசு பாரீசின் புறநகரில் இருந்த மியூடனில் ஒரு வானியற்பியல் வான்காணகத்தை உருவாக்கி நிறுவ ஜான்சனுக்கு ஒரு நல்கையை வழங்கியது. இதில் அப்போது ஜான்சன் மட்டுமே தனி வானியலாலராக இருந்தார். 1889 இல் இலே வெர்யருக்குப் பின் அமேதீ மவுசெசு பணியாற்றத் தொடங்கியதும் அவர் தெசுலாந்திரேசைப் பணிக்கமர்த்தி வானியற்பியலை முன்னணிக்குக் கொணர்ந்தார்.பின்னவர் சூரியக் கதிர்நிரல்மானியை ஒருங்கே ஜார்ஜ் ஏல் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார்.

இவர் 1898 இல் மியூடனில் ஜான்சனுடன் இணைந்து அறிவியல் பணியாளர்தொகையை இருமடங்காக்கினார். ஜான்சன் 1907 இல் இறந்ததும், இவர் இயக்குநராகி, நிறுவன வளர்ச்சித் தடத்தை விரிவாக்கலானார். அப்போது இவர் பிரெஞ்சு வானியல் கழகத்தில் 1907 முதல் 1909 வரை தலைவராகவும் இருந்தார்.[2] 1914 இல் முதல் உலகப் போர் தொடங்கியதும், இவர் தன் 60 களில் இருந்தாலும், பொறியாலர் அணியில் படைமேலராகப் பணிசெய்ய வந்துள்ளார். பின் மேஉம் உய்ர் பதவியையும் பெற்றார். 1918 இல் போர் உடன்படிக்கிக்குப் பின்னர், மியூடன் வ்வழ்வை மேற்கொண்டு 1926 வரை பணியாற்றினார். அப்போது இதன் ஆட்சிப் பொறுப்பு பாரீசு வான்காணகத்தோடு இணைந்துவிட்டது. இருநிறுவனங்களுக்கும் மவுசெசு 1929 இல் ஓய்வுபெறும் வரையில் இயக்குநராக இருந்தார்.

இவர் தன் இறப்பு வரை ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவரது ஒருசாலை வானியலாளரான இரேமாண்டு மிச்சர்டு இவரைப் பற்றி, இவர் தன் இயல்பால், நடத்தையால், வாழ்முறையால் எப்போதும் ஒரு படைவீரராகவும் அலுவலராகவுமே விளங்கினாரே ஒழிய அறிவாளியாக என்றும் நடந்துகொண்டதே இல்லை. எனக் கூறுகிறார்.

தகைமைகள்

தொகு

விருதுகள்

இவர் பெயர் இடப்பட்டவை

  • நிலாவின் குழிப்பள்ளம் தெசுலாந்திரேசு இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
  • பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் தெசுலாந்திரேசு பரிசு
  • குறுங்கோள் (11763 தெசுலாந்திரேசு)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 F. J. M. Stratton (1954). "Henri Alexandre Deslandres. 1853-1948". Obituary Notices of Fellows of the Royal Society 9: 64. doi:10.1098/rsbm.1954.0006. 
  2. Bulletin de la Société astronomique de France, 1911, vol. 25, pp. 581-586
  3. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.

வெளி இணைப்புகள்

தொகு

நினைவேந்தல்கள்

தொகு

பகுப்பு பிரெஞ்சு வானியலாளர்கள்