என்றி வான் பீட்டர்சு வில்சன்
அமெரிக்க உயிரியலாளர்
என்றி வான் பீட்டர்சு வில்சன் (Henry Van Peters Wilson) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓர் உயிரியலாளர் ஆவார். இவர் 1863 முதல் 1939 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்தார். [1] வடக்கு கரோலினாவின் சேப்பல் இல் நகரத்திலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையின் பேராசிரியராக இருந்தார். 1907 ஆம் ஆண்டில், சிலிக்கேட் கடற்பாசிகள் செயல்பாட்டு உயிரினங்களாக மீண்டும் உருவாகும் திறனைக் கொண்டுள்ளன என்பதை நிரூபித்தார். தனிப்பட்ட செல்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று இயந்திர வழிமுறைகளால் பிரிக்கப்பட்ட பின்னர் ஒரு சிறந்த பட்டு துணி மூலம் சலித்த பிறகும் இவை செயல்பாட்டு உயிரின்ங்களாக மாறின. [2]
என்றி வான் பீட்டர்சு வில்சன் Henry Van Peters Wilson | |
---|---|
பணி | உயிரியலாளர் |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Henry Van Peters Wilson, A Biological Memoir, "[1] பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்".
- ↑ Migration and Rearrangement of Cells Within Sponges, "[2] பரணிடப்பட்டது 2011-09-30 at the வந்தவழி இயந்திரம்"