என். பிரபாகரன்

தமிழ் எழுத்தாளர்

என். பிரபாகரன் (ஆங்கிலம்: N. Prabhakaran ) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளரும், புதின ஆசிரியரும், கவிஞரும், நாடக ஆசிரியரும், கட்டுரையாளரும், கல்வியாளரும், மலையாளப் பத்திரிக்கைகளில் பத்தி எழுதுபராகவும் உள்ளார் [1] என் குன்கம்பு மற்றும் கல்யாணி ஆகியோருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் பிரபாகரன் மூத்த மகனாக 1952 டிசம்பர் 30 அன்று கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரச்சினிக்கடவு என்ற ஊரில் பிறந்தார். இவரது குழந்தை பருவத்தை மடாயி என்ற ஊரில் கழித்தார். [2] பிரபாகரன் அரசு மடாய் எல்பி பள்ளி, மடாய், அரசு உயர்நிலைப்பள்ளி, பையனூர் கல்லூரி மற்றும் தலசேரி அரசு பிரென்னன் கல்லூரி ஆகியவற்ரில் படித்துள்ளார். இலட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மலையாளத் துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நெய்யூர் பல்கலைக்கழக கல்லூரி, பெரம்பிரா திருவனந்தபுரம் சி.கே.ஜி நினைவு அரசு கல்லூரி போன்றவற்றில் பணியாற்றிய இவர் கடைசியாக தலசேரி அரசு பிரென்னென் கல்லூரியில் மலையாளத் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மலையாளத்தின் வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார். பிரபாகரன் தலச்சேரியில் தர்மடம் என்ற இடத்தில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை தொகு

என். பிரபாகரன் 1966 இல் எழுதத் தொடங்கினாலும், 1971 இல் வெளியிடப்பட்ட "ஓட்டயான்டே பாப்பன்" என்ற சிறுகதையுடன் ஒரு எழுத்தாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்த கதை அதன் விஷூ சிறப்பு தொடர்பாக மலையாள வார இதழான மாத்ருபூமி அழ்ச்சப்பதிப்பு நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்றது.

இப்போது என் பிரபாகரன் 42 புத்தகங்களைக் கொண்டுள்ளார். பல வகைகளில், தனது எழுத்துக்கணக்கில் வரவு வைத்துள்ளார்.

விருதுகள் தொகு

1. 1971இல் ஓட்டயான்டே பாப்பன்" - விஷு சிறப்பு தொடர்பாக மாத்ருபூமி வார இதழால் நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்றார்.

2.1987இல் கேரள சங்கீதா நாடகா அகாதமி நடத்திய மாநில அளவிலான நாடக போட்டியில் முதல் பரிசை புலிஜன்மம் வென்றார்.

3. 1987இல் புலிஜன்மாம் செருகாட் விருதையும், கேரள சாகித்ய அகாடமி விருதையும் வென்றது.

4. இதே பெயரில் உள்ள நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட புலிஜன்மம் திரைப்படம் 2006 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது

5. 1994இல் "பிக்மேன்" என்ற சிறுகதை கதா (புது தில்லி) விருதை வென்றது.

6. 1995இல் பட்டியம் கோபாலன் ஸ்மாரகா விருதையும் பெற்றுள்ளார்.

7. 1996இல் இவரது சிறுகதைத் தொகுப்பான இராத்ரிமொழி கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றது.

8. 2000இல் இவரது சிறுகதைத் தொகுப்பான மாயாமயன் என்பது வி.கே.உன்னிகிருஷ்ணன் நினைவு விருதை வென்றது.

9. 2005இல் திய்யூர் இரெகக்கால் என்ற தனது படைப்பிற்காக சமாரகா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் முதல் இ.எம்.எஸ் நினைவு விருதையும் வென்றார்.

10. உ.பி. ஜெயராஜ் விருது 2007இல் வழங்கப்பட்டது.

11. தனது புதினமான ஜீவன்டே தெளிவுகள் என்பதற்காக மேலூர் தாமோதரன் சாகித்ய புரஸ்காரம் விருதை 2008இல் வென்றார்

12. இவரது தெரிஞ்செடுத்த கதகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்) முதல் வைகோம் முஹம்மது பஷீர் சமாரகா சாகித்தியா விருதை (2009) வென்றது

13. 21 வது முட்டத்து வர்கி நினைவு விருது 2011இல் பெற்றார்.

14. 2017இல் "குலிபாதாலம்" என்ற சிறுகதை பத்மராஜன் விருதை வென்றது [3] [4]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பிரபாகரன்&oldid=3236106" இலிருந்து மீள்விக்கப்பட்டது