என் காதல் கண்மணி
என் காதல் கண்மணி (En Kadhal Kanmani), 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ்த் திரைப்படம். விக்ரம் மற்றும் ரேகா நம்பியார் ஆகியோர் முன்னணி நாயகர்களாக நடித்திருக்கும் இத்திரைப்படமே விக்ரமின் நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2][3] இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத எல். வைத்தியநாதன் இசையமைத்திருக்கிறார்.
என் காதல் கண்மணி | |
---|---|
இயக்கம் | டி. ஜெ. ஜாய் |
தயாரிப்பு | சி. செல்வராஜ் |
கதை | டி. ஜெ. ஜாய் மதுரை பாலன் (வசனம்) |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | விக்ரம் ரேகா நம்பியார் எஸ். எஸ். சந்திரன் வி. கே. ராமசாமி கோவை சரளா |
ஒளிப்பதிவு | எம். எம். ரெங்கசாமி |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | பிராகரசிவ் சினி ஆர்ட்ஸ் |
விநியோகம் | பிராகரசிவ் சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 17, 1990[1] |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுபுகைப் பழக்கத்திற்கு அடிமையான விநோத் (விக்ரம்), ஹேமா மீது காதல் கொண்டார். புகைப் பழக்கத்தில் இருந்து மீண்டு எவ்வாறு ஹேமாவை திருமணம் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
நடிகர்கள்
தொகு- விக்ரம்
- ரேகா நம்பியார்
- வி. கே. ராமசாமி
- எஸ். எஸ். சந்திரன்
- கோவை சரளா
- லூசு மோகன்
- காந்திமதி
இசை
தொகுஇத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் எல். வைத்தியநாதன்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "என்னை விட்டு" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | |||||||
2. | "கங்கை எப்போதும்" | வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ் | |||||||
3. | "என்னையா" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
4. | "இன்று தான்" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | |||||||
5. | "அய்யாக் கண்ணு" | வைரமுத்து | சித்ரா |