என் சகியே
என் சகியே (En Sakhiye) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் நடித்த இப்படத்தை ரவி-ராஜா இயக்கினர். கே பாஸ்கர் ராஜ் தயாரிப்பில், பிரதீப் ரவி இசை அமைப்பில், 1 டிசம்பர் 2000 ஆம் தேதி வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.[1][2][3][4][5]
என் சகியே | |
---|---|
இயக்கம் | ரவிராஜா |
இசை | பிரதீப் ரவி |
நடிப்பு | தேவராஜ் ரம்யா பிரபுசேகர் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுதேவராஜ், திவ்யா, பிரபு சேகர், கே. ராஜன், மீனல், ஷண்முகசுந்தரம், கரிகாலன், சூர்யகாந்த், ஸ்ரீலேகா ராஜேந்திரன், கனிஸ்கா, ஹேமா, சீமா, ரகி சாவத், கணேஷ் ஆச்சார்யா, அரசகுமார் பி. டி.
கதைச்சுருக்கம்
தொகுஆதரவற்ற சகி (திவ்யா) உதவித்தொகையால் படித்து கல்லூரி பட்டப்படிப்பில் தங்கம் வெல்கிறாள். பின்னர், எங்கு செல்வது என்றறியாமல் திகைத்து நிற்கும் சகிக்கு அடைக்கலம் அளிக்கிறாள் தோழி ரமா (மீனல்)
பின்னர், ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜாவின் தவறான நடவடிக்கைகளைப் பற்றி எச்சரிக்கை விடுக்கிறார் மேலாளர் ஷண்முகம் (ஷண்முகசுந்தரம்). ஆனால், ராஜாவை அயராது துரத்தி, தன் வசம் காதலில் விழ வைக்கிறாள் சகி. நல்லவனாக தன்னை திருத்திய சகியை திருமணம் செய்ய தயாராக இருக்கிறான் ராஜா. திருமணத்திற்கு முன்பு, சகி ராஜாவை கொன்று விடுகிறாள்.
ராஜாவின் இறுதிச்சடங்கில் பங்குகொள்ள ராஜாவின் தம்பி சுனில் (தேவராஜ்) வருகிறான். பொறுப்பாகவும் அழகாகவும் இருக்கும் சுனில், சகி வசம் காதல் கொள்கிறான். ராஜாவை கொன்றது சகி என்று தெரிந்த ராஜாவின் நண்பனையும், ஷண்முகத்தையும் கொன்று விடுகிறாள் சகி. ராஜாவை கொன்றது யார் என்று தேடும் சுனிலிற்கு பதில் கிடைத்ததா என்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
தொகுவெளியீடு : 2000 |
பதிவு : 2000 |
நீளம் : 24.03 |
தயாரிப்பு : பிரதீப் ரவி |
திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் பிரதீப் ரவி ஆவார். காமகோடியன் மற்றும் பரதன் ஆகியோர் பாடல்களின் வரிகளை எழுதினர். 5 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2000 ஆம் ஆண்டு வெளியானது.[6][7][8]
பாடல்களின் பட்டியல்
தொகுட்ராக் | பாடல் | பாடியவர் |
---|---|---|
1 | சகியே | அனுராதா ஸ்ரீராம், பிரசன்னா |
2 | கோவிந்தம்மா | சபேஷ் |
3 | மாமா வரலாமா | அனுப்பம்மா, பிரதீப் குமார். |
4 | என்னடி அம்மா | ஸ்ரீராம சந்திர மினாம்பதி, கோபிகா பூர்ணிமா |
5 | பொன்னான பூமி | ஹரிணி |
வெளி-இணைப்புகள்
தொகு- http://shakthi.fm/ta/album/show/6dd29c49 பரணிடப்பட்டது 2012-12-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "http://www.gomolo.com/en-sakiye-movie/12285". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "https://spicyonion.com/movie/en-sakiye/".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "https://timesofindia.indiatimes.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://movies.syzygy.in/censor/en-sahiye-celluloid". Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.bbthots.com/reviews/2001/ensakhiye.html". Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "https://www.saavn.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "https://itunes.apple.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://mio.to/album/Ravi/En+Sakiyae+%282000%29". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=