எபினேசர் கோப் மார்லி

எபினேசர் கோப் மார்லி (Ebenezer Cobb Morley) (பிறப்பு 16 ஆகத்து 1831 - இறப்பு 20 நவம்பர் 1924) ஒரு ஆங்கிலேய விளையாட்டு வீரர் மற்றும் நவீன காற்பந்து விளையாட்டு மற்றும் காற்பந்துச் சங்கம் ஆகியவற்றை உருவாக்கியத் தந்தை என்றும் அறியப்படுகிறார்.

எபினேசர் கோப் மார்லி
பிறப்புஆகத்து 16, 1831(1831-08-16)
ஹல், கிழக்கு யாக்சயர், இங்கிலாந்து
இறப்பு20 நவம்பர் 1924(1924-11-20) (அகவை 93)
லண்டன் , இங்கிலாந்து
கல்லறைபார்ன்ஸ், ரிச்சுமண்ட், லண்டன், இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
பணிவழக்கறிஞர்
பெற்றோர்எபினேசர் மார்லி மற்றும் ஹன்னா மாரியா[1]
வாழ்க்கைத்
துணை
பிரான்சஸ் குட்

மார்லி, இங்கிலாந்தில் உள்ள 10,கார்டன் சுகயர், பிரின்சஸ் தெரு,[2] ஹல்[3] என்ற இடத்தில் பிறந்தார். இங்கு தனது 22 வது வயது வரை வாழ்ந்து வந்தார்.[2] பிறகு இவர் 1858 ஆம் ஆண்டில் பார்ன்ஸ் நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.[3] இங்கு பார்ன்ஸ் சங்கம் மற்றும் காற்பந்துச் சங்கம் ஆகியவற்றை 1862 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.[3] 1863 ஆம் ஆண்டு மோர்ட்லேக்கை சார்ந்த சங்கத்தின் தலைவராக பெல் லைஃப் நாளிதழில் காற்பந்து விளையாட்டிற்கு என ஒரு நிர்வாக அமைப்பு வேண்டும் என்று முன்மொழிகிறார். இதுவே (Freemasons' Tavern ) தச்சர்களின் சத்திரத்தில் நடைபெற்ற முதல் காற்பந்து சங்கக் கூட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது.[3]

இவர் காற்பந்துச் சங்கத்தின் (FA) முதல் செயலாளராகவும் (1863-1866) மற்றும் அதன் இரண்டாவது தலைவராகவும் (1867-1874) இருந்தார் மற்றும் பார்ன்ஸ் நகரில் அவரது வீட்டில் காற்பந்து விளையாட்டின் முதல் விதிகளை உருவாக்கினார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Findings on Ebenezer Cobb Morley (1831-1924)". The FA.
  2. 2.0 2.1 "Memorial to FA founder Ebenezer Cobb Morley". Hull Daily Mail (6 February 2010). பார்த்த நாள் 22 October 2013.
  3. 3.0 3.1 3.2 3.3 Butler, Bryon (January 2009). "Morley, Ebenezer Cobb (1831–1924)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. பார்த்த நாள் 9 August 2009.(subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபினேசர்_கோப்_மார்லி&oldid=2564086" இருந்து மீள்விக்கப்பட்டது