எப்பாள் ஏரி
எப்பாள் ஏரி பெங்களூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது பெல்லாரி சாலையும் பெங்களூரு வெளிவட்டப் பாதையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இது 1537-இல் கெம்பேகௌடா அவர்களால் உருவாக்கப்பட்ட மூன்று ஏரிகளுள் ஒன்று.
இந்த ஏரியில் சேர்க்கப்பட்ட கழிவுகளால் மிகவும் மாசுற்றிருந்த இது இந்திய-நார்வே சூழியல் திட்டம் ஒன்றினால் 1998-ஆம் ஆண்டு 2.7 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இங்கு தூர்வாரப்பட்ட மண்ணைக் கொண்டு இரு சிறு தீவுகள் உருவாக்கப்பட்டன. இங்கு வளர்க்கப்பட்ட தாவரங்கள் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாக உள்ளன. இந்த ஏரிக்கு வாத்துகள், கூழைக்கடா, அரிவாள் மூக்கன் முதலிய பல வகையான நீர்ப் பறவைகள் வருகின்றன.