எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட்
பிரான்சிஸ் ஸ்காட் கீ பிட்ஸ்ஜெரால்ட் (Francis Scott Key Fitzgerald, செப்டம்பர் 24, 1896 – திசம்பர் 21, 1940) இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும்[1] ஓர் அமெரிக்க எழுத்தாளர். இவரது புதினங்களும் சிறுகதைகளும் ஜாஸ் காலம் என்று அவரழைத்த நவீனத்துவப் பாணியில் அமைந்திருந்தன. முதலாம் உலகப் போரின்போது ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்த அமெரிக்க எழுத்தாளர்களைக் குறிக்கும் 1920களின் தொலைந்த தலைமுறை (Lost Generation) உறுப்பினரும் ஆவார். தமது வாழ்நாளில் திஸ் சைட் ஆஃப் பாரடைஸ், த பியூட்டிபுல் அண்ட் டாம்(ன்ட்), டெண்டர் இஸ் த நைட் மற்றும் அவரது புகழ்பெற்ற த கிரேட் கேட்ஸ்பி என்ற நான்கு புதினங்களை எழுதினார். அவரது முடிவுறாத புதினம் த லவ் ஆஃப் த லாஸ்ட் டைகூன் அவரது மறைவிற்குப் பின்னர் வெளியானது. இவற்றைத் தவிர பிட்ஸ்ஜெரால்ட் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
எஃப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட் | |
---|---|
1937இல் கார்ல் வான் வெக்டெனால் எடுக்கப்பட்ட ஒளிப்படம் | |
பிறப்பு | பிரான்சிஸ் ஸ்காட் கீ பிட்ஸ்ஜெரால்ட் செப்டம்பர் 24, 1896 செயிண்ட். பால், மின்னசோட்டா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | திசம்பர் 21, 1940 ஆலிவுட், லாஸ் ஏஞ்செலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 44)
தொழில் | புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் |
தேசியம் | அமெரிக்கர் |
காலம் | 1920–40 |
வகை | நவீனத்துவம் |
இலக்கிய இயக்கம் | தொலைந்த தலைமுறை |
கையொப்பம் | |
இவரது புதினங்கள் த கிரேட் கேட்ஸ்பியும் டெண்டர் இஸ் த நைட்டும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. மேலும் 1937 முதல் 1940 வரையிலான இவரது வாழ்க்கையும் பிலவ்டு இன்பிடெல் என்றத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The golden moment: the novels of F. Scott Fitzgerald. MR Stern. 1970. University of Illinois Press
வெளி இணைப்புகள்
தொகு- F. Scott Fitzgerald Papers at Princeton University
- F. Scott Fitzgerald Centenary pages—at the University of South Carolina
- Annotated Bibliography—at Scott-Fitzgerald.com
- குட்டன்பேர்க் திட்டத்தில் F. Scott Fitzgerald இன் படைப்புகள்
- Works by F Scott Fitzgerald at Project Gutenberg Australia
- எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட் at Find a Grave
- Works by F. Scott Fitzgerald (public domain in Canada)
- Texts and Translations—at narod.ru (Russian & English)
- Online catalog of F. Scott Fitzgerald's personal library, online at LibraryThing
- F. Scott Fitzgerald பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம் at C-SPAN's American Writers: A Journey Through History