எமிரேட்சு விளையாட்டரங்கம்

ஆஷ்பர்டன் குரூவ் (Ashburton Grove), விளம்பர ஆதரவின் காரணமாக எமிரேட்சு விளையாட்டரங்கம் (Emirates Stadium) என்று அறியப்படுவது, வடக்கு இலண்டனில் உள்ள கால்பந்து மைதானமாகும். இது பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் கால்பந்துக் கழகத்தின் விளையாட்டரங்கம் ஆகும். 60,000-க்கும் சற்றே அதிகமான கொள்ளளவு உடைய இம்மைதானம் 2006 ஆண்டு திறக்கப்பட்டு, ஆர்சனல் கால்பந்துக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் வெம்பிளி மற்றும் ஓல்டு டிராஃபோர்டு மைதானங்களுங்குப் பிறகு இதுவே அதிக கொள்ளளவு கொண்டதாகும். 2004-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மைதானத்துக்கான நிதி கிடைப்பது சிரமமாகவிருந்தது. அக்டோபர் 2004-இல் எமிரேட்சு ஏர்லைன்சு நிதியாதரவு தருவதாக செய்தி வெளியிடப்பட்டது. £390 செலவில் 2006-ஆம் ஆண்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. ஆர்சனல் அணியின் போட்டிகள் தவிர்த்து, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் ஐரோப்பிய போட்டிகள் அனைத்தும் இங்குதான் விளையாடப்பட்டு வருகின்றன.

ஆஷ்பர்டன் குரூவ்
Emirates Stadium - East side - Composite.jpg
எமிரேட்சு விளையாட்டரங்கம்
இடம் லண்டன்
அமைவு 51°33′18″N 0°6′31″W / 51.55500°N 0.10861°W / 51.55500; -0.10861
எழும்பச்செயல் ஆரம்பம் சூலை 2003
திறவு 22 சூலை 2006
உரிமையாளர் ஆர்சனல் கால்பந்துக் கழகம்
தரை Desso GrassMaster
கட்டிட விலை £ 390 million
                     £ 470 million (entire project to date)
கட்டிடக்கலைஞர் Populous (formerly HOK Sport)[1]
Structural engineer Buro Happold
Services engineer Buro Happold
Main contractors Sir Robert McAlpine
குத்தகை அணி(கள்) ஆர்சனல் கால்பந்துக் கழகம் (2006–)
அமரக்கூடிய பேர் 60,361[2]
பரப்பளவு 105 × 68 metres

வெளியிணைப்புகள்தொகு

உசாத்துணைகள்தொகு

  1. "Emirates Stadium". Populous. 28 ஜனவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "UEFA Champions League Press Release (2011–12)" (PDF). Union of European Football Associations. 27 February 2012 அன்று பார்க்கப்பட்டது.