எம்சி றா என்பவர் இலங்கையை சேர்ந்த சொல்லிசைக்கலைஞர் ஆவார். கிறிசானை தனது இசைத்துறையின் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு 2011ம் ஆண்டுகளில் தனது இசைப்பயணத்தை அரம்பித்த இவர் பல மேடைகளில் தனது கால்தடத்தை பதித்து 2013ம் ஆண்டு கொழும்பு தமிழ்சங்கத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து வெளியிட்ட ”அத்தியாயம்” இறுவட்டின் மூலமாக தனது திறமையை வௌிப்படுத்தனார்.இதன் மூலம் இலங்கையின் சுதந்திர இசைத்துறைக்குள் தனது முதலடியை எடுத்து வைத்தார் .

Mc Ra (இலங்கையின் சுதந்திர இசைக்கலைஞர்)

அதன் பின்னர் மேலும் பல இசைக்கலைஞர்களுடன் இணைந்து தனது இசைத்துறையில் பணியாற்றியிருக்கின்றார் அவற்றி் 2014ம் ஆண்டு தனது நண்பன் "young Krizh" உடன் இணைந்து ”[Aanpaavam]” என்கின்ற பாடலை வெளிபிட்டார் இதன் மூலமாக தனது இசைப்பயணத்தின் அடத்த பரிமாணத்தை ஆரம்பித்தார் எனலாம் இதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு [VKJ MATHI] உடன் இணைந்து ”[RAATCHASI]” பாடலை வெளியிட்டார் இந்தப்பாடலின் மூலம் தனது குரலுக்கென தனத்துவமான அடையாளம் உண்டு என வெளிப்படுத்தினார் இந்தப்பாடல்களின் வெற்றிகளைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு உலகக்கிண்ண கிறிக்கட் போட்டிக்காக ”[M Entertainments]” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் பிரபல்யமான இசையமைப்பாளர் பிருந்தன் ராகவனின் இசையில் ”[Enga Kitta Modha vandhaal]” என்கின்ற பாடலுக்குகாகன வாய்ப்பு கிடைக்கப்பெற்றது இந்தப்பாடல் இவரது இசைத்துறையின் அடுத்தகட்ட நகர்விற்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றது. ”இந்தப்பாடலின் தாக்கம் தனக்கென ஒரு புதிய இடத்தை மக்களின் மத்தியில் ஏற்படுத்திக்கொடுத்ததாக” அவரே பல மேடைகளில் தெரிவிதிருக்கின்றார். மேலும் தன்னை ஒரு இசையமைப்பாளராக 2015ம் ஆண்டுகளில் வெளிப்படுத்திக்கொண்டதுடன் 2016ம் ஆண்டின் ஆரம்பத்தில் இதற்காக ”இந்த போழப்புக்கு” என்கின்ற பாடலுக்கு இசையமைத்து வெளியிட்டார். இது பல இணையத்தளங்களில் வெகுவாக பாராட்டப்படதுடன் பல இளைஞர்களின் றிங்கிங் டோன் ஆகக்கூட மாறியது குறிப்படத்தக்கது.

Mc Ra - கிரிசான் மகேசனுடன்

இதனைத்தோடர்ந்து இலங்கையின் பல முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து தனது இசைப்பயணத்தை முன்னெடுத்திருக்கின்றார் மற்றும் தனது குருவான கிரிசான் மகேசனுடன் இணைந்து பணியாற்றிவிட வேண்டும் என்பதே தனது ஒரு முயற்சியின் உச்சகட்டமாக மாற்றிக்கொண்ட இவருக்கு 2015ஆம் ஆண்டுகளின் அதற்கான சந்தர்பங்களும் கிடைக்கப்பெற்றது இதன் பின்னர் தற்போது இவர்களின் ஒருங்கிணைப்பில் 11 சொல்லிசைக்கலைஞர்களைக்கொண்டு ”இலங்கை தமிழன்” என்கிகின்ற பாடல் வெளிவர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சொல்லிசைக்கலைஞர்கள் கிரிசான் மகேசன்,விதுசான்,சிவி லக்சான் உடன்

இசை வெளியீடுகள்[தொகு] தொகு

ஆண்டு பாடல்
2014 [ஆண்பாவம்(Aanpaavam)]
2015 [ராட்சசி(RAATCHASI)]
2015 [எங்க கிட்ட மோத வந்தால்(Enga Kitta Modha vandhaal)]
2016 [Ilangai Tamilan [Soon], Amma,Kathal Thevathai, Inthapolapuku.]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்சி_றா&oldid=3598374" இலிருந்து மீள்விக்கப்பட்டது